அனிருத் இசையையே அட்டை காப்பி அடித்த “தீ தளபதி” தமன்.. மொத்த உழைப்பும் வீணா போச்சே என புலம்பும் விஜய்

நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் ஹிட்டாகிறதோ, இல்லையோ கட்டாயம் அவரது திரைப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடல்களும் அடிதூளாக இருக்கும். மேலும் விஜய்யின் சுறுசுறுப்பான நடனமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும். இதன் காரணமாகவே விஜய்யின் திரைப்படத்தில் பல குத்து பாடல்கள் இடம்பெறும்.

இதனிடையே அண்மையில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. இதற்கு கூடவே சேர்ந்து இப்பாடல்கள் காப்பியடிக்கப்பட்ட பாடல்கள் என இணையத்தில் நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்தும் வருகின்றனர். அந்த வகையில் யூடியூபில் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வரும் ரஞ்சிதமே பாடல் கடந்த மாதம் வெளியானது.

Also Read : எம்ஜிஆர், விஜயகாந்த்தை தொடர்ந்து சிக்கிய விஜய்.. கார்னர் செய்யும் ரெட் ஜெயண்ட் உதயநிதி

தமனின் இசையில் வெளியான இப்பாடலை நடிகர் விஜய், பாடகி மானசி உள்ளிட்டோர் பாடியிருப்பர். இப்பாடலை கேட்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குத்தாட்டம் ஆடி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர். இந்த நிலையில் இப்பாடல் நடிகர் ராம்கி நடிப்பில் வெளியான உளவாளி திரைப்படத்தில் இடம்பெற்ற, மொச்ச கொட்ட பல்லழகி என்ற பாடலின் இசையை காப்பி செய்து ரஞ்சிதமே பாடல் உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து தள்ளினர்.

சரி, இந்த பாடல் தான் காப்பியடிக்கப்பட்டது என பார்த்தால், அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்ட தீ தளபதி என்ற பாடலும் காப்பியடிக்கப்பட்ட பாடலாகவே அமைந்துள்ளது. இப்பாடல் வெளியான இரண்டு மணி நேரத்தில் இணையத்தில் மூன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், நடிகர் சிம்பு, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் இப்பாடலில் மாஸாக இடம்பெற்றுள்ளனர்.

Also Read : மீண்டும் சந்தனமாக நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

தீ தளபதி எங்கள் நெஞ்சத்தின் அதிபதி என்ற வரிகள் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. இதனிடையே இப்பாடல் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வா வரவா வரவா, உன்னை துரத்தி வரவா’ என்ற பாடலை போலவே காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.

பொதுவாக அனிரூத் இசையமைக்கும் பாடல்களே காப்பியடிக்கப்படும் பாடல்கள் தான் என நெட்டிசன்கள் கூறி வருவதுண்டு ஆனால் இவருடைய இசையையே தமன் காப்பியடித்து பாடல் அமைத்தது தான் பலருக்கும் வேடிக்கையாக உள்ளது. வரும் பொங்கலன்று வாரிசு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த இரண்டு பாடல்கள் வெளியானதால் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி அடுத்தடுத்து நெட்டிசன்கள் கூறி வருவதால் மொத்த உழைப்பும் வீணா போச்சே என தளபதி புலம்பி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயிரம் சொன்னாலும் விஜய்க்கு இது ஒரு விளம்பரம் ஆகவே பார்க்கப்படுகிறது.

Also Read : ரஜினியை முழுவதுமாக காப்பியடிக்கும் விஜய்.. எப்படியாச்சும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் நமக்கு வரணும் ஆசை.!

Next Story

- Advertisement -