மாமியாரிடம் சிக்கித் தவிக்கும் சக்காளத்தி.. கோபியை வைத்து ட்ராமாவை அரங்கேற்றும் ஈஸ்வரி

Bhakkiyalakhsmi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவிற்கு மாமியார் என்ற நினைப்பு கொஞ்சமாவது இருக்கிறது. அதனால் பக்கத்தில் இருந்து வேணுங்கறதை செஞ்சு கொடுப்போம் என்று நினைக்கிறார். ஆனால் அதை கெடுக்கும் வகையில் ராதிகாவின் அம்மா நீ எதுவும் பண்ண வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

இதனால் ஈஸ்வரியை கண்டுக்காமல் இருக்கும் ராதிகா மற்றும் அவருடைய அம்மாவை வச்சு செய்யும் வகையில் ஈஸ்வரி களத்தில் இறங்கி விட்டார். அதாவது கோபி இருக்கும் பொழுது சரியாக நான் சாப்பிடவில்லை மாத்திரை சாப்பிடவில்லை அதனால் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. நீ எங்கேயும் போகாமல் என் பக்கத்திலேயே இருந்து என்னை பார்த்துக்கொள்.

எழிலுக்குப் பிறந்த விடிவுகாலம்

இவங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயம் இருக்கிறது என்று கோபியிடம் டிராமாவை அரங்கேற்றுகிறார். கோபியும் அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நான் என்னுடைய வேலையை முடித்துவிட்டு உடனே வந்து விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு ராதிகா, ஈஸ்வரிடம் உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் என்னிடம் கேளுங்கள் என்று சொல்கிறார்.

அடுத்து ராதிகாவின் அம்மா உன் மாமியார் பண்ணுகிற டிராமாவால் உன் வீட்டுக்காரர் என்னை எந்த மாதிரி நினைச்சு கேள்வி கேட்டு போகிறார் என்று சொல்கிறார். இதனை அடுத்து அமிர்தா தாத்தாவிற்கு தேவையான சாப்பாடு எடுத்து பரிமாறுகிறார். இது தெரியாமல் ஜெனியும் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க வருகிறார். பிறகு தாத்தா சாப்பிடுவதை பார்த்து எதுவும் சொல்லாமல் ஜெனி மாடிக்கு போய் விடுகிறார்.

ஒழுங்கா இருந்து ஜெனி இப்பொழுது அமிர்தாவை பார்த்து பொறாமை படுகிறார். இந்த பொறாமை என்ன பிரச்சனையை உண்டாக்கப் போகிறதோ? அடுத்ததாக ராதிகாவின் அம்மா,00 வயித்துல பிள்ளையை வைத்துக்கொண்டு சரியா சாப்பிடாம கவலையிலேயே ராதிகா இருக்கிறாள் என்று கவலைப்படுகிறார். இதற்கெல்லாம் கோபி ஒரு வினையை வீட்டில் கூட்டிட்டு வந்து வைத்திருப்பதால் தான் என்று புலம்பிக் கொண்டே ஃப்ரூட்ஸ் கட் பண்ணி வைத்திருக்கிறார்.

ஆனால் அந்த ஃப்ரூட்சை கோபியின் அம்மா எடுத்து சாப்பிடுகிறார். இதைப் பார்த்த ராதிகாவின் அம்மா இதை நான் ராதிகாவிற்காக வைத்திருந்தேன் நீங்க போய் சாப்பிடுகிறீர்களே என்று கேட்கிறார். அதற்கு கோபியின் அம்மா இதில் என்ன ராதிகா பெயரா எழுதி இருக்கு என்று நக்கல் அடிக்கிறார். உடனே ராதிகா உங்களுக்கு தான் சுகர் இருக்கிறது. இதெல்லாம் காலையில சாப்பிடக்கூடாது. மறுபடியும் சுகர் அதிகமாயிடுச்சுன்னா உங்க பிள்ளை நாங்க தான் காரணம் என்று சொல்வார் என ராதிகா செல்கிறார்.

அதனால ராதிகா ஃப்ரூட்ஸ் அனைத்தையும் வாங்கி விடுகிறார். இதை கோப்பிடம் வேற மாதிரி ஈஸ்வரி பத்த வைத்து விட்டார். அதனால் ராதிகாவுக்கு போன் பண்ணி கன்னாபின்னான்னு என்று திட்டி அதட்டுகிறார். அந்த வகையில் ராதிகா என்ன சொல்ல வருகிறார் என்று காது கொடுத்து கேட்காத கோபி கோபமாக பேசி விட்டார். இனி வீட்டுக்கு வந்த பிறகு உண்மை தெரிந்த உடன் கோபி நிலைமை என்ன ஆகுமோ. கடைசியில் ஈஸ்வரிடம் மாட்டிக் கொண்டு ராதிகா தான் அவஸ்தை படுகிறார்.

இதனை தொடர்ந்து எழில் ரெடி பண்ணி வைத்திருந்த கதை தயாரிப்பாளர்களுக்கு பிடித்துப் போனதால் படம் பண்ணுவதற்கு ஓகே ஆகிவிட்டது என்ற சந்தோசத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி பாக்கியா குடும்பம் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -