வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பாக்யாவுக்கு விரித்த வலையில் பலியாடாக சிக்க போகும் ஈஸ்வரி.. மொத்த வன்மத்தையும் கொட்டப் போகும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று விட்டார் என்பதை கொண்டாடும் விதமாக பாக்யா மற்றும் ஒட்டுமொத்த குடும்பமும் பூரித்து போய் இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தில் இனியாவை பார்த்ததும் பாக்கியா பாசத்தை கொட்டி கொஞ்சுகிறார். ஆனால் இனியா, கோபியை பார்த்ததும் அப்பா என்று அவர் பக்கம் பாசத்தை கொட்ட ஆரம்பித்து விட்டார்.

இருந்தாலும் இதெல்லாம் பாக்கியா கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். அடுத்தபடியாக பாக்கியா ஹோட்டலில் புது ஆர்டரை எடுத்திருக்கிறார். அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு வேலைகளையும் பார்த்து வருகிறார். ஆனால் இந்த ஆர்டரை சொதப்ப வேண்டும் என்று கோபி கையாளு ஒருவர் பாக்யா ஹோட்டலில் இருப்பதால் அதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்.

பாக்யாவை பழிவாங்க கோபிக்கு கிடைத்த சந்தர்ப்பம்

அந்த வகையில் பாக்கியாவிடமிருந்து நம்பிக்கையை பெற வேண்டும் என்பதற்காக நான் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் மேற்பார்வை பார்த்து ரெஸ்ட் எடுத்தால் போதும் என்று பாக்யா மூளையை சலவை செய்ய பார்க்கிறார். ஆனால் பாக்யா சூதனமாக அதெல்லாம் ஒன்று வேண்டாம். நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் நான் சொல்ற வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொள்கிறார்.

அப்பொழுது அங்கே வந்த பழனிச்சாமி,பாக்கியாவின் செயல்களை பார்த்து மிரண்டு போய் பாராட்டி விடுகிறார். இதனை தொடர்ந்து இதற்கான வேலைகளை காலையில் சீக்கிரமாக எழுந்து பார்க்க வேண்டும் என்று வீட்டில் வந்து பாக்யா சில பொறுப்புகளை செய்து முடிக்கிறார். அப்பொழுது ஈஸ்வரிடம் நீங்கள்தான் காலையில் என்னுடன் வந்து அடுப்பை பற்ற வைத்து துவங்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஆனால் ஈஸ்வரி நான் வரவில்லை நீ எதனாலும் பார்த்துக்கோ என்று மறுப்பு தெரிவிக்கிறார். பிறகு பாக்கியா, எப்படி பேசினால் மாமியாரை மடக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி ஈஸ்வரியை வருவதற்கு சம்மதம் வாங்கி விட்டார். ஆனால் இந்த ஆர்டரை எப்படியாவது சொதப்ப வேண்டும் என்று கோபி பிளான் பண்ணி இருக்கிறார்.

இது தெரியாத ஈஸ்வரி, பாக்யா கேட்டுக்கொண்டபடி ஹோட்டலில் வந்து பிள்ளையார் சுழி போட போகிறார். கடைசியில் இதில் ஏதாவது சொதப்பல்களும் பிரச்சனைகளும் வரும் பொழுது ஈஸ்வரி மீது மொத்த பழியும் விழப் போகிறது. அத்துடன் தன்னுடைய சந்தோஷத்தை இழந்து மொத்தமாக ஒரு ஓரமாக இருக்கும் நிலைமைக்கு ஈஸ்வரி தள்ளப்படுவார். ஆனால் இது எல்லாம் கோபியின் வேலை என்பது யாருக்கும் தெரியப்போவதில்லை.

இருந்தாலும் அத்தையின் சூழ்நிலை மாற்ற வேண்டும் என்று பாக்யா சில அதிரடியான முடிவுகளை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் அவ்வப்போது செழியன், கோபியை சந்தித்து பேசி ஆறுதல் தேடிக் கொள்கிறார். அதே மாதிரி கோபி ஆறுதல் சொல்லும் அந்த தருணத்தில் பாக்யா மற்றும் குடும்பத்தால் ஏற்படும் சில தொந்தரவுகளை குத்தி காட்டி பேசுகிறார்.

இதனால் செழியன் குடும்பத்திலிருந்து தனியாக போகவும் வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கோபி அவருடைய வன்மத்தை தீர்க்கும் வகையில் ஒவ்வொருவரையும் வைத்து பாக்கியாவை சிக்க வைக்கப் போகிறார். இதில் முதல் பலியாடாக ஈஸ்வரி மாட்டிக் கொள்ளப் போகிறார்.

- Advertisement -

Trending News