எஸ்கே 21-ன் ஒன் லைன் ஸ்டோரி.. தளபதி விஜய் படத்தின் அட்டகாப்பியா?.

SK 21 Movie Updates: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 21-வது திரைப்படம் ஆன எஸ்கே 21 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை உட்பட பல நகரங்களில் நடந்தது. இன்னும் ஒரு சில வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எஸ்கே 21 படம் தளபதி விஜய் படத்தின் அட்டை காப்பி என்பது தெரியவந்துள்ளது.

எஸ்கே 21 படம் வழக்கம்போல் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தைப் போன்று இருக்காதாம். நகைச்சுவைக்குப் பெயர் போன சிவகார்த்திகேயனின் இந்த படத்தில் காமெடியே இருக்காதாம். முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் தானாம். இந்த படத்தில் எஸ்கே நடிக்கும் கேரக்டர் அவருக்கு ரொம்பவே நல்லா செட் ஆயிருக்கிறது. ராணுவ வீரர் போல் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கெட்டப் போடுவது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.

Also Read: ரஜினியின் மாபெரும் ஹிட் படத்தில் வாய்ப்பு கேட்ட விஜய்.. உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணிய கமல்

எஸ்கே 21 படம் விஜய் படத்தின் தழுவலா?

ஆனால் இப்போது கிடைத்திருக்கும் தகவலின் படி, விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தின் தழுவல் தான் எஸ்கே 21 படம். துப்பாக்கி படத்தைப் போலவே இதிலும் சிவகார்த்திகேயன் விடுமுறைக்கு வரும் போது தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் ஆப்ரேஷனில் ஈடுபடுவது தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. இந்த படத்தில் இதுவரை பார்த்திராத சிவகார்த்திகேயனின் நடிப்பை பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் எஸ்கே 21 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தனது எக்ஸ் தளத்தில் இன்று மாலை 5 மணிக்கு படத்தை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக ஒரு வீடியோவை வெளியிட்டனர். அது இந்த படத்தின் டைட்டிலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கேப்டனை கௌரவிக்கும் தளபதி.. வெங்கட் பிரபு செய்யும் தரமான சம்பவம்