சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

புறா எச்சத்தால் இவ்வளவு பாதிப்பா.? மீனாவின் கணவர் இறப்புக்கு காரணம் இதுதான்

தற்போது திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறப்புதான். புறா எச்சத்தால் உயிர் போகும் அளவிற்கு ஆபத்து உண்டா என பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் கண்டிப்பாக பெரும்பான்மையான வீடுகளில் பறவைகள் வளர்த்து வருகின்றனர்.

அந்தப் பறவைகளின் கழிவுகளை அகற்றுவதில் தான் பிரச்சனை இருக்கிறது. அதாவது குழந்தைகள், உடல் பலகீனமாக உள்ளவர்கள் அல்லது வேறு ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோழி, புறாக்களின் எச்சங்களை சுத்தப்படுத்தவும் அல்லது சுத்தம் செய்யும் இடங்களில் நின்றாலே நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

மேலும் பறவைகளின் எச்சங்கள் காய்ந்த பிறகு அவற்றை சுத்தம் செய்யும்போது பவுடர் போல அந்த எச்சங்கள் காற்றில் பரவுகிறது. இதனால் உடல் பலவீனமானவர்கள் அதை சுவாசித்தால் அவர்களுக்கு நுரையீரல் பிரச்சனை வருகிறது. மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் கோவிட் தோற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த தொற்று வரும்போது அவர்களது உடல் மிகவும் பலவீனமாகி ஆகிவிடுகிறது. இந்நிலையில் பறவைகளின் கழிவுகளில் ஏற்படும் பூஞ்சையின் பெயர் ஹிஸ்டாப்லஸ்மோசிஸ் என்று சொல்லப்படுகிறது. இதனால் உடலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் பறவைகளின் எச்சங்களை சுத்தம் செய்யும்போது முக கவசம், கையுறை ஆகியவற்றை கட்டாயம் பயன்படுத்தி பாதுகாப்புடன் செய்ய வேண்டும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மீனாவின் கணவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு புறா எச்சத்தால் ஏற்படும் கிருமி அவரது சுவாசக் குழாயை மேலும் பாதித்துள்ளது.

இதனால் வித்யாசாகரின் இரண்டு நுரையீரலும் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யக் காத்திருந்தனர். ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மோசமாகி நேற்று மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

Trending News