தமிழ் திரையுலகம் எத்தனையோ புதுப்புது நாயகர்களை வருடம் தோறும் வளர்த்து வருகிறது. அப்படியாக ஒரு கட்டத்தில் சில வாய்ப்புகளுக்காக சுற்றித்தெரியும் எத்தனையோ இளைஞர்களை சென்னையில் எப்போதும் பார்க்க நேரிடலாம். முயற்ச்சியை மேம்படுத்தியோர் வெற்றிகனிகளை ருசித்தவாறே உள்ளனர்.
அப்படியே ஒரு டிவி சேனலில் ஔிபரப்பான சீரியலில் ஒரு ஓரமாக நடித்து வந்து இன்றைய தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தில் இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். கனாகானும் காலங்கள் சீரியலில் லீ்ட் கூட இல்லாத ஒரு ரோலில் நடிக்க துவங்கியவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
அப்போது அந்த நாடகத்தின் லீட் ரோலில் இருந்த் இர்ஃபான் முகமது வாங்கிய ஊதியே குறைவு அப்படியாக இருப்பின் சிவகார்த்திகேயன் உட்பட பல்வேறு துணைநடிகர்கள் வாங்கிய சம்பளம் 2000 என்று இர்ஃபானே ஒரு சந்திப்பில் கூறயிருந்தார்.
இப்போது எஸ்.கே வாழ்வில் அடைமழை பொழிந்து வருகிறது என்றும் அதற்காக அவர் தந்த எஃபோர்ட் கொஞ்சம் நஞ்சம் இல்லை என்றும் குறிப்பிட்டார். சின்னத்திரையில் சிறு வேடத்தில் தோன்றியவர் பெரிய திரையில் பெரும்திரளான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் என்றால் அது அத்தனை எளிதல்ல என்றும் கூறினார்.
மேலும் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்திற்கு 30 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பற்றி பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.