அப்பா வேணுமா, அம்மா வேணுமா.. இனியா எடுத்த அதிரடி முடிவு

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. அதிரடியான திருப்பங்களுடன் அடுத்தடுத்த ட்விஸ்ட் இத்தொடரில் அரங்கேறி வருகிறது. அதாவது பாக்யா கோபிக்கு விவாகரத்து கொடுத்தவுடன் கோபியின் அம்மா, செழியன், இனியா எல்லோரும் பாக்கியாவிடம் வாதாடுகின்றனர்.

ஆனால் எதுவும் பேசாமல் பாக்கியா மௌனம் சாதித்து வருகிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோபி பாக்கியா மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அதாவது இத்தனை நாள் விவாகரத்து செய்ய தான் பாக்கியா காத்துகொண்டு இருந்தாள். தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தவுடன் ஒத்துக்கொண்டாள் என்பது போல கோபி பேசி வருகிறார்.

ஆனால் அதற்கும் பாக்கியா வாயைத்திறந்து எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளார். ஆனால் தன் அம்மாவுக்காக எழில் கோபியிடம் சரமாரியான கேள்விகளை வைக்கிறார். இந்நிலையில் தன்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டு பாக்கியா வீட்டைவிட்டு கிளம்ப முற்படுகிறார்.

அப்போது இனியா பாக்யாவை இங்கேயே இருக்குமாறு சொல்லி கதறி அழுகிறார். அப்போது பேசிய பாக்கியா, இந்த வீட்டில் எவ்வளவோ பிரச்சனை வந்தபோது யார் மேலேயும் நான் கோபப்பட்டது இல்ல. ஆனா இப்ப நடந்திருக்க விஷயம் ரொம்ப பெருசு.

இனியா நீ இப்ப முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்க. உனக்கு அம்மா வேணுமா, அப்பா வேணுமானு இப்பவே சொல்லு என்று பாக்கியா கேட்கிறார். இதனால் என்ன சொல்வதென்று தெரியாமல் இனியா அழுதுகொண்டே நிற்கிறார்.

எப்போதுமே இனியா தந்தையின் செல்லப் பிள்ளையாக தான் வளர்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல் தற்போது அம்மாவுடன் சென்றால் அப்பாவைப் பார்க்க முடியாது என்பதற்காகவும், பாட்டி, தாத்தா, அண்ணனுடன் இருந்தால் கண்டிப்பாக அம்மா திரும்ப வருவார் என்பதை கருதி இனியா அப்பாவுடன் இருக்க தான் சம்மதிப்பார்.

- Advertisement -