விக்ரமை வெளிக்கொண்டு வர போராடும் இனியா.. ஜான்சி ராணியாக மாறிய ஆலியா

சன் டிவியில் வருகின்ற தொடர்களில் இனியா சீரியல் அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய பிரைம் டைமில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. தற்போது பரபரப்பாக ராஜேஷை கண்டுபிடிக்கும் முயற்சியில் இனியா தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார். அவர் ஈசியாக கண்டுபிடிப்பதற்காக ராஜேஷ் ஒரு குழுவை அவரிடம் கொடுக்கிறார். அதை பார்த்த இனியா தந்திரமாக ராஜேஷ் யார் அடைத்து வைத்திருக்கிறார் என்று தெரிந்து கொள்கிறார்.

பிறகு இவரை எப்படியாவது காப்பாற்றி சோனாலிடம் ஒப்படைத்து விக்ரமை ஜெயில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் என்று நினைத்து கிளம்புகிறார். அந்த நேரத்தில் விக்ரமின் அப்பா உன்னால தான் இப்போது இந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டு என் பையன் ஜெயிலில் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிறான். அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உன்னையும், உன் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்று இனியாவை திட்டுகிறார்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அந்த நேரத்தில் விக்ரம் ஜெயிலில் ஒரு போலீசை கொலை செய்ததாக டிவியில் வருவதை பார்த்து விக்ரம் வீட்டில் இருக்கும் அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதை பார்த்த இனியா விக்ரமை மறுபடியும் தப்பாக புரிந்து கொள்வார் என்று நினைத்த நிலையில் அதற்கு எதிர் மாறாக கண்டிப்பாக விக்ரம் இந்த கொலையை பண்ணி இருக்க மாட்டார் என்று நம்புகிறார். ராஜேஷை கூடிய சீக்கிரத்தில் கண்டுபிடித்து, போலீசையும் கொலை பண்ண வில்லை என்று நான் நிரூபிப்பேன் என்று சொல்கிறார்.

அடுத்த கட்ட வேலையாக ராஜேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தந்திரமாக ஒரு பிளான் பண்ணுகிறார். அதற்கேற்ற மாதிரி அந்த வில்லனும் இருக்கும் இடத்தை சொல்லி இனியவை அங்க வரச் சொல்கிறான். அப்பொழுது இனியா மற்ற யாரிடமும், போலீஸ் கிட்டையும் தகவல் சொல்லாமல் தனியாகவே அந்த இடத்திற்கு போகிறார்.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

அப்பொழுது அங்கே இனியாவை பார்த்த அந்த வில்லன் நீ எப்படி இங்க, நீ இன்னைக்கு காலையில என்னிடம் பிரச்சனை பண்ணவதான என்று கேட்கிறார். அதற்கு இனியா எப்படியோ சமாளித்து பார்க்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் இனியவை களத்தில் இறங்குகிறார். அங்கு தான் ராஜேஷ் இருக்கான் என்று கண்டிப்பாக இனியாவுக்கு தெரிந்து விட்டது.

அதனால் இந்த இடத்தில் இருந்து எப்படியாவது ராஜேஷை கொண்டு போய் விட்டு கோர்ட்டில் நிறுத்தி விட வேண்டும் என்று அவரே நேரடியாக வில்லன்களிடம் சண்டை போடுகிறார். இந்த சீன்களை பார்ப்பதற்கு கொஞ்சம் ஓவராக இருந்தாலும் கதைப்படி எப்படியோ விக்ரமை இனியா புரிந்து கொண்டதை பார்க்கும் பொழுது நன்றாக தான் இருக்கிறது. அதே மாதிரி கூடிய விரைவில் விக்ரமமை வெளியில் எடுத்து ஒன்று சேர்ந்தால் இன்னும் இந்த நாடகம் சூடு பிடிக்கும்.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்