மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழில் 2010ஆம் ஆண்டு வெளியான பாடசாலை படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இனியா. அதை தொடர்ந்து வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து தமிழில் ஆதிக்கம் செலுத்திய இனியா, வாகை சூடவா, மௌனகுரு என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். இதனால் தமிழகத்தில் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் இனியாவுக்கு சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் முன்னணி நடிகையாக வளர முடியவில்லை என்ற சோகம் அவருக்குள் இருந்து வருகிறது.
எப்படியாவது முன்னணி நடிகையாக மாறி விட வேண்டும் என்பதற்காக மற்ற நடிகைகள் பயன்படுத்தும் அதே யுத்தியை அவரும் பயன்படுத்தியுள்ளார். அப்படி என்ன யுக்தி என்று கேட்கிறீர்களா. கவர்ச்சி போட்டோ சூட் தான்.
தமிழ் சினிமாவில் ஹோம்லியாக நடித்து வந்த கதாநாயகிகள் கவர்ச்சியாக புகைப் படங்களை வெளியிட்டால் அவர்களுக்கு எந்த அளவுக்கு ரீச் இருக்கும் என்பதை தெரிந்து வைத்து சரியான நேரத்தில் முரட்டு கவர்ச்சி புகைப்படங்களை இறக்கியுள்ளார் இனியா.
சமீபகாலமாக தமிழ் சினிமாவை பொருத்தவரை சில நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை அதிகமாக வெளியிட்டு வந்த நிலையில் அவர்களுக்கே டப் கொடுக்கும் விதமாக வெளியிட்டுள்ள இனியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் அனைவரையும் அசர வைத்துள்ளது.