வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கிரிக்கெட்டில் இதுவரை இந்தியாவின் 6 டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்கள்.. வக்கார் யூனிசின் கேரியரில் ஜடேஜா வைத்த கரும்புள்ளி

இந்திய அணி இதுவரை கண்ட 6 அபாயகரமான பேட்ஸ்மேன்கள்:

கபில்தேவ்: ஒரு காலத்தில் டெண்டுல்கர் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்டு சென்றுவிடுவார்கள் ஆனால் கபில்தேவ் காலத்தில் அவர் விளையாட்டை காண்பதற்கு மற்ற வீரர்கள் எப்பொழுது அவுட் ஆவார்கள் என்று காத்துக் கிடப்பார்கள்.இதற்கு 1983 ஆம் வருடம் உலக கோப்பை போட்டியில் கபில்தேவ் அடித்த 175 ரன்கள் தான் சான்று.

நவ்ஜத் சிங் சித்து: பொதுவாக சிங் என்றால் கோபக்கார ஆளாக தான் இருப்பார்கள் என்று 90ஸ் கிட்ஸ் இவரை பார்த்து தான் தெரிந்திருப்பார்கள். இரண்டு பந்துகள் ரன் வரவில்லை என்றால் மூன்றாவது பந்தில் இவருக்கு சிக்ஸர் அடித்தே ஆக வேண்டும். டெண்டுல்கருக்கு முன்னாடி ஷேன் வார்னேவை பந்தாடியது இவர்தான்.

அஜய் ஜடேஜா: பார்ப்பதற்கு தான் ஆள் அமுல் பேபி போல இருப்பார்,எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் விளையாட வரும் ஜடேஜா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன். கடைசி நேரத்தில் இறங்கி முப்பது- நாற்பது ரன்கள் 20 பந்துகளில் அடித்து விடுவார்.1996 உலகக் கோப்பை போட்டியில் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் வக்கார் யூனிசின் பந்தை தவிடு பொடி ஆக்கிவிட்டார். அதுவரை உச்சாணி கொம்பில் இருந்த வக்கார் யூனிசின் கேரியரில் ஒரு கரும்புள்ளியை வைத்துவிட்டார்.

யுவராஜ் சிங்: 6 பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து என்னிடம் மோதாதே என இங்கிலாந்து தலைசிறந்த பவுலர் ஸ்டூவர்ட் போர்டுக்கு ஒரு வார்னிங் கொடுத்த அபாயகரமான வீரர் யுவராஜ் சிங். டோனி தலைமையில் T-20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை இந்தியா வாங்கியதற்கு 90% இவர்தான் காரணம்.

விரேந்தர் சேவாக்: பயமே எனக்கு இல்லை என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் இவர்தான். ஆட்டத்தின் முதல் பந்தாக இருந்தாலும் சரி, இவர் 99 ரன்களில் இருந்தாலும் சரி பந்து எல்லைக்கோட்டையை நோக்கித்தான் போகும்.:selfless and fearless” என்ற வார்த்தைக்கு இவர்தான் உதாரணம்.

ரோகித் சர்மா: 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர் தான். பத்து ஓவருக்குள் இவரது விக்கெட்டை வீழ்த்தி விட வேண்டும், இல்லையென்றால் இந்திய அணி 300 ரண்களை கடப்பது உறுதி. ஆரம்பத்தில் எலி போல் வந்தவர் இப்பொழுது புலியாய் மாறி பந்தாடுகிறார். 209,264,208 இவர் அடித்த மூன்று இரட்டை சதங்கள.

- Advertisement -

Trending News