நா என்ன காரா, பைக்கா பழகி பார்த்து ஓகே சொல்றதுக்கு.. ட்ரெண்டாகும் தோனியின் LGM ட்ரெய்லர்

Movie LGM: தோனி தயாரிப்பில் எல்.ஜி.எம் படம் உருவாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

காதல், காமெடி கலாட்டாவாக வெளிவந்துள்ள இதன் ட்ரெய்லர் இன்னொரு லவ் டுடே என்று சொல்லும் அளவுக்கு இளைஞர்களை கவர்ந்துள்ளது. அந்த வகையில் ட்ரைய்லரின் ஆரம்பத்திலேயே ஹீரோவிடம் ஹீரோயின் காதலை சொல்வது போல் தொடங்குகிறது.

Also Read: மார்க்கெட் இல்லாததால் தர மட்டமாக இறங்கிய தமன்னா.. குடும்ப குத்து விளக்காக நடித்த 5 படங்கள்

அதை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக வரும் நதியா தன் மகனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார். ஆனால் இவானா கல்யாணத்திற்கு பிறகு தனியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அதை தொடர்ந்து நடக்கும் கலாட்டாக்களும் மாமியாரை புரிந்து கொள்வதற்காக இவானா வெளியூர் செல்ல பிளான் போடுவதும் என டிரைலர் கலகலப்பாக செல்கிறது.

உண்மை தெரிந்த நதியா நான் என்ன காரா, பைக்கா பழகி பார்த்து ஓகே சொல்றதுக்கு என்ன பேசுவது, காட்டுக்குள் இவானாவுடன் புலியிடம் சிக்கிக் கொள்வது என அவருடைய கேரக்டர் இளமையாகவே இருக்கிறது. அதிலும் வித்தியாசமான கெட்டப்பில் வரும் சாண்டி, ஹீரோவின் நண்பனாக வரும் விஜே விஜய் என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் படத்தில் இருக்கிறது.

Also Read: பில்லா கெட்டப்பில் 17 வருடம் கழித்து என்ட்ரி கொடுத்த நயன்தாரா.. ஒரே வீடியோவில் த்ரிஷா மார்க்கெட் காலி

இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இதன் மூலம் தோனி வசூலை அள்ளிவிடுவார் எனவும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள இந்த எல்.ஜி.எம் ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்