செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அந்த ஒரு விஷயம் இல்லனா 100 வயசுக்கு மேலயும் நான் தான் சூப்பர் ஸ்டார்.. தனக்கு தானே சூனியம் வைத்த ரஜினி

Super Star Rajini: சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்பதை தான் ஹாட் டாப்பிக்காக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று நடந்த ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொத்தத்தையும் உடைத்து பேசி விட்டார்.

என்னதான் ரஜினிக்கு 72 வயதானாலும் இளம் நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய படங்களில் எனர்ஜி குறையாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரிடம் அந்த ஒரு விஷயம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் 100 வயசுக்கு மேலேயும் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று, தனக்குத்தானே வைத்துக் கொண்ட சூனியத்தை பற்றி ரஜினி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்தை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்த ரஜினி.. நம்பர் ஒன் யாரு, சர்ச்சைக்கு வச்ச முற்றுப்புள்ளி

80களில் ரஜினி தனது சினிமா பயணத்தை துவங்கும் போது ஏகப்பட்ட கஷ்டத்தை அனுபவித்து தான் முன்னேறி வந்துள்ளார். அப்படி அவர் நடிகரான பிறகு அவரிடம் இருந்து மதுப்பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் அதிகமாகிவிட்டது. ஆனால் அவற்றையெல்லாம் அவருடைய மனைவி லதா தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார் என்பதை அவர் ஏற்கனவே நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

ஆனால் ரஜினி நேற்று நடந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், ‘குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட யாரும் தொட்டு கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம்’ என்று தன்னுடைய தவறை திருத்திக் கொண்டாலும் அதை இன்னமும் மறக்காமல் தன்னுடைய ரசிகர்களை நல்வழிப்படுத்துவதற்காக சொல்கிறார்.

Also Read: 72 வயதிலும் வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள்.. ஜெயிலர் மேடையில் விஜய்யை சீண்டிப்பார்க்கும் கலாநிதி மாறன்

அதனால்தான் இவர் இன்றும் சூப்பர் ஸ்டார் ஆக தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவருக்கு குடிப்பழக்கம் மட்டும் இல்லை என்றால், 72 வயதில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலை வந்திருக்காது.

இப்பவும் அவருக்காக பல முன்னணி தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி காத்திருக்கின்றனர். அப்படி என்றால் இன்னமும் அவர் சூப்பர் ஸ்டார் தான் என்று அவருடைய ரசிகர்கள் என்றென்றைக்கும் அந்தப் பட்டம் ரஜினிக்கு உரியது தான் என அடித்து செல்கின்றனர். ரஜினி மனதிலும் அதுதான் இருக்கிறது.

Also Read: மாலத்தீவுக்கு போயிட்டு வந்தபின் ரஜினிக்கு கிடைத்த மன நிம்மதி.. நெல்சனை கட்டி தழுவ இதுதான் முக்கிய காரணம்

- Advertisement -

Trending News