பிக்பாஸ்க்கு பிறகு யாரு சகவாசமும் வேண்டாம்.. ஓபனாக பேசிய சீசன்5 போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் அனுதினமும் சுவாரஸ்யம் மிகுந்த சண்டைக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதனால் கூடுதல் பொறுப்புடன் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் தவறாமல் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

எனவே நாற்பது நாட்களை கடந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி இன்னும் இரண்டே மாதத்தில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு நாளும் கடுமையான டாஸ்க்களை கொடுக்க பிக்பாஸ் திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சதந்திர நாணயங்களை யார் யார் வைத்துள்ளார்களோ, அவர்களுக்கு கூடுதல் ஆளுமையை கொடுத்து மற்ற போட்டியாளர்களை பிக் பாஸ் திணறடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது நடந்து முடிந்த கேப்டன் பதவிக்காக போட்டி நடத்தப்பட்டபோது பிரியங்கா, நிரூப் நட்பை பிக்பாஸ் வீட்டில் இருந்து எடுத்து செல்வேன் என்று ஆக்ரோசமாக கூறியபோது அதைப் பார்த்து போட்டியாளர்கள் சிரித்தனர்.

அதில் முக்கியமாக அக்ஷரா பிரியங்காவின் கருத்துக்கு கைதட்டி நக்கலாக சிரித்தார். பின்பு ஐக்கி பெர்ரியுடன் கலந்துரையாடிய அக்ஷரா பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் வெளியே சென்றதும் இவர்கள் யாருடனுமே சுத்தமா டச் வச்சுக்க மாட்டேன் என்று ஓபன் டாக் கொடுத்துள்ளார்.

அதற்கேற்றாற்போல் அக்ஷராவும் வருணை தவிர வேறு யாருடனும் அந்தளவு நெருக்கமாக பேசவும் பழகவும் இல்லை. எப்பொழுதுமே அக்ஷரா தனியாகவே இருப்பதை விரும்புவதால் வெளியே சென்றதும் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் தொடர்பில் இருக்க மாட்டேன் என்று சொல்லியிருப்பது அவருடைய வெளிப்படையான பேச்சை காட்டுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்