ஜென்மத்துக்கும் அவரை மன்னிக்க மாட்டேன்.. ஆக்ரோஷத்துடன் விஷ்ணு விஷால் வெளியிட்ட பேட்டி

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷ்ணு விஷால், முதல் முதலாக சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு காமெடி நடிகர் சூரி உடன் விஷ்ணு விஷால் நடிக்கும் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

அந்த வகையில் குள்ளநரிக்கூட்டம், ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்கள் இவர்களது காம்போ-வில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படி சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் நண்பர்களாக இருந்த சூரிய மற்றும் விஷ்ணு விஷால் இருவருக்கும் இடையே தற்போது பனிப்போரை நிகழ்கிறது.

அதாவது 30 வருடங்களாக போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஷ்ணு விஷாலின் தந்தை முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மீது சூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண மோசடி புகாரை அளித்தார். அந்த வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்த உச்ச நீதிமன்றம் விசாரணையை 6 மாதத்திற்குள் முடித்து வைக்க உத்தரவிட்டது.

இன்னிலையில் தந்தையின் மீது இப்படிப்பட்ட புகாரை அளித்த சூரியை ஜென்மத்துக்கும் மன்னிக்க மாட்டேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் விஷ்ணுவிஷால் ஆக்ரோஷத்துடன் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி நண்பர்களாக பழகி, இந்த பிரச்சினை ஆரம்பித்த பிறகும் தன்னுடன் மூன்று படங்களை இணைந்து நடித்த சூரி என்ன மனநிலையில் தன்னுடன் பழகி இருப்பார்.

அந்த மூன்று வருட இடைவெளியில் தன்னுடைய வீட்டிற்கு வந்து சாப்பிட்டதெல்லாம் மறந்து விட்டாரா. யாரெல்லாம் வீட்டிற்குள் உள்ளே விடுவது விடக்கூடாது என்பதை சூரியின் நடவடிக்கையின் மூலம் உணர்ந்து கொண்டேன். மேலும் சூரி கொடுத்த புகாரில் ஒவ்வொரு பக்கத்திற்கும் அவருக்கு நான் தெளிவான பதிலை அளிக்க முடியும்.

ஆனால் ஐபிஎஸ் அதிகாரியாக 30 வருஷம் நேர்மையுடன் பணியாற்றிய தன்னுடைய தந்தைக்கு, ஓய்வு பெற்ற பிறகு இப்படிப்பட்ட அவதூறு பெயரை வாங்கித்தந்த சூரி உடன் இனிமேல் எந்த படங்களிலும் நடிக்க மாட்டேன். அப்படி அவருடன் நடித்து வரும் பெயர் எனக்கு தேவை இல்லை என்று விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் சூரியின் மீது இருக்கும் கோபத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்.

Next Story

- Advertisement -