சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சக்சஸும் பிஸினஸும் தான் எனக்கு வேணும்.. ஹிட் இயக்குனரின் கால்ஷீட்டை திருப்பி வாங்கிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எங்க வீட்டுப் பிள்ளை என மக்கள் மத்தியில் பெயரெடுத்தவர் சிவகார்த்திகேயனும். அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்றெல்லாம் ஒரு வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது சிவகார்த்திகேயன் 100 கோடி கிளப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்..ஆரம்பத்தில் சினிமாவில் நிறைய அடிவாங்கி முன்னேறியவர் சிவகார்த்திகேயன். சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள், காமெடிகள், துணைக் கதாபாத்திரம் என்று வளர்ந்து இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கிறார்.

மண்டேலா படம் எடுத்த இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக  இருந்தார் சிவா. அதற்கு வேண்டிய கால்ஷீட்க்களையும் ஏற்கனவே கொடுத்துவிட்டார். இப்பொழுது அந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை எடுத்துப் படிக்கும் பொழுது ஹீரோயினுக்கான போஷன் அதில் ரொம்ப கம்மியாக இருந்ததாம்.

இதனால் சற்று அதிர்ச்சியான சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்டை மாற்ற சொல்லியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி படத்தில் எனக்கு சக்சஸும், பிஸினஸும் தான் முக்கியம். அதனால் நீங்கள் ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணுங்கள்.

எவ்வளவு மாதங்கள் வேணும்னாலும் எடுத்துக்கொள்ளுங்கள், இந்த மாதிரி கதை பண்ண முடியாது. நீங்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையையும் எழுதிட்டு வாருங்கள் என்று அனுப்பி விட்டாராம். சிவகார்த்திகேயன் படம் என்றாலே அதில் நிச்சயம் சக்சஸ்ஃபுல் பாட்டுக்கள் இருக்கும்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் பாட்டுக்கள் படத்தில் வைக்க முடியாது. அதனால் சிவகார்த்திகேயன் எப்பொழுதுமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகள் நிறைய வைப்பார். இதனால் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு கொடுத்த கால்சீட்டை சற்று தள்ளிப் போட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் எப்பொழுதுமே  பெரிதும் எதிர்பார்ப்பது படத்தின் சக்சஸும், வியாபாரமும் தான்.

- Advertisement -

Trending News