பல நூறு கோடி பட்ஜெட், 5 பெரிய படங்களில் மாட்டிக்கொண்ட லைக்கா.. பிரதீப் வைத்து சுறாக்கு வீசும் வலை

லைக்கா ப்ரொடக்ஷனில் தயாரிக்கும் எல்லா படங்களுமே பிரம்மாண்டமாக தான் உருவாகும். அந்த வகையில் தற்போது ஐந்து பெரிய பட்ஜெட் படங்களை லைக்கா தயாரித்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை லைக்கா தயாரிக்கிறது.

இதைத்தொடர்ந்து மணிரத்தினத்துடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை லைக்கா தயாரித்தது. இதில் முதல் பாகம் வசூலை வாரி குவித்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Also Read : இந்தியன் 2 கதை இதுதான்.. கமலை வாட்டி வதைக்கும் ஷங்கர், சேனாதிபதிக்கு கொடுக்கும் நெருக்கடி

இப்போது பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தையும் பிரம்மாண்டமாக லைக்கா தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித் கூட்டணியில் உருவாகும் ஏகே 62 படத்தையும் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தில் கேமியோ தோற்றத்தில் ரஜினி நடிக்கிறார்.

Also Read : வாய்ப்பு கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ளாத இயக்குனர்.. கடுப்பான ரஜினி, துரத்தி விட்ட லைக்கா

இவ்வாறு ஐந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை தயாரிப்பதால் இந்நிறுவனம் பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இப்போது எல்லா கடனையும் அடைப்பதற்காக ஒரு திட்டம் போட்டுள்ளனர். அதாவது இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் வெளியாகி வசூலை வாரி குவித்தது.

ஆகையால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பிரதீப் ரங்கநாதனை லண்டனுக்கு அழைத்து ரஜினிக்கு ஒரு கதையை ரெடி பண்ண சொல்லி இருக்கிறார்களாம் லைக்கா நிறுவனம். ஏனென்றால் ரஜினியை வைத்து படம் இயக்கினால் எல்லா கடனையும் அடைத்து விடலாம் என்ற யோசனையில் உள்ளனராம்.

Also Read : ரஜினியை வைத்து பல நூறு கோடி பிசினஸில் இறங்கிய லைக்கா.. குடும்பத்தில் யாரையும் விட்டு வைக்காத ரகசியம்

Next Story

- Advertisement -