வடிவேலுவின் போலி டாக்டர் பட்டம் விவகாரம்.. பதறிப் போய் மனித உரிமை கொடுத்த விளக்கம்

பல வருடங்களாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் வடிவேலு சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது அவர் கைவசம் மாமான்னன், சந்திரமுகி 2 திரைப்படங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார்.

Also read: 19 வயது நடிகையை கட்டி அணைத்த வடிவேலு.. பெரிய மனுஷன் பண்ற வேலையா! முகம் சுளிக்க வைத்த புகைப்படம்

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து அந்த டாக்டர் பட்டம் போலியானது என்ற விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியது. அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் பலரும் இந்த விஷயத்தை கேலியும், கிண்டலும் செய்து வந்தனர். இப்படி இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஆனதை தொடர்ந்து தற்போது அதற்கான விளக்கம் வந்துள்ளது.

அந்த வகையில் ஊழல் எதிர்ப்பு மனித உரிமை சங்கத்தின் ஆணையர் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இந்த டாக்டர் பட்டம் போலியானது என்று செய்திகள் வெளி வருகிறது. ஆனால் அது உண்மை கிடையாது. சரியான ஒப்புதல் பெற்று தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது.

Also read: படம் தான் ஊத்திக்கிச்சு, பட்டமும் போலியா.. வடிவேலுவை திருப்பி அடிக்கும் கர்மா

மேலும் இந்த நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததே தவிர அவர்கள் இந்த விருதை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி மட்டும் தான் இப்படி ஒரு தவறான தகவலை பரப்பி இருப்பதாகவும், தற்போது அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வடிவேலு குறித்து ஏகப்பட்ட சர்ச்சையான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் இந்த விவகாரமும் அவருடைய பெயரை ரொம்பவே டேமேஜ் செய்து விட்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே மிகுந்த பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவம் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

Also read: அந்தப் படத்திற்குப் பின் தான் வடிவேலு மக்கா மாறிட்டாரு.. கழுவி ஊற்றிய இயக்குனர்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை