Reviews | விமர்சனங்கள்
Mission Impossible – Dead Reckoning Movie Review- 61 வயதில் ஆக்சனில் மிரட்டிய டாம் குரூஸ்.. மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் எப்படி இருக்கு? முழு விமர்சனம்
இப்படி அதிரி புதிரியாக இருக்கும் இப்படம் ரசிகர்களுக்கான மிகப்பெரிய ட்ரீட் என்றுதான் சொல்ல வேண்டும்.

Mission Impossible – Dead Reckoning Movie Review: ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் படத்தின் முதல் பாகம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் இப்படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங் போடப்பட்டிருக்கிறது.
அதன் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம். 61 வயதாகி இருக்கும் டாம் குரூஸுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் திருப்திப்படுத்தும் விதமாகவே இப்படம் இருக்கிறது. கதை படி ஆபத்தை விளைவிக்கும் ஒரு தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவதற்காக ஹீரோ வருகிறார்.
Also read: எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான 6 பேர்.. நம்பியாரின் இன்னொரு முகம்
அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இரு சாவிகள் வேண்டும். அதில் ஒரு சாவி கையில் இருக்க மற்றொரு சாவியை தேடி புறப்படும் ஹீரோ தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா என்பதுதான் படத்தின் கதை. வழக்கம் போல ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து இருக்கும் ஹீரோ எமோஷனல், காமெடி போன்றவற்றிலும் அதகளம் செய்து இருக்கிறார்.
அதிலும் இந்த வயதில் உயிரை பணையம் வைத்து அவர் நடித்திருக்கும் பல காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் தொடங்கி பின்னணி இசை, விசுவல் காட்சிகள், கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்தும் பக்காவாக செய்யப்பட்டிருப்பது படத்திற்கான கூடுதல் பலமாக இருக்கிறது.
Also read: பல லட்சம் மதிப்புள்ள கார் பரிசு, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்.. ஷர்மிளாக்கு அடித்த ஜாக்பாட்
அது மட்டுமல்லாமல் படத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்த விறுவிறுப்பு கதையுடன் நம்மை பயணிக்க வைக்கிறது. அதிலும் ஹீரோ ஓடும் ஓட்டம் நம்மை சீட்டின் நுனிக்கே வர வைத்து விடுகிறது. அந்த அளவுக்கு முதல் பாதி பரபரப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி சற்று வேகம் குறைந்தது போல் தோன்றுகிறது.
இருப்பினும் ஹீரோ மொத்த படத்தையும் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து தாங்கி பிடித்து விடுகிறார். இப்படி அதிரி புதிரியாக இருக்கும் இப்படம் ரசிகர்களுக்கான மிகப்பெரிய ட்ரீட் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் மிஷன் இம்பாசிபிள் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டி இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.5/5
