ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பொண்டாட்டியை அனுப்பிட்டு புது மாப்பிள்ளையாகும் கோபியின் மகன்.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இப்போது சுவாரஸ்யமான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இத்தொடரின் கதாநாயகி பாக்யா தனது கனவை அடைய சில விஷயங்களை இழக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறார். இதனால் ஆங்கிலம் கற்றுக்கொண்ட பாக்யா அதை நிறுத்திவிட்டார்.

ஏனென்றால் ஒரே நேரத்தில் பல வேலைகளில் கவனம் செலுத்த முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மறுபுறம் பாக்கியலட்சுமி குடும்பம் விழா கோலம் கொண்டுள்ளது. காரணம் கோபியின் மூத்த மகனான செழியனின் மனைவி ஜெனிக்கு வளைகாப்பு நடைபெறுகிறது. இந்த விழாவில் கோபியும் கலந்து கொள்கிறார்.

Also Read : குணசேகரனின் கனவை தர மட்டமாக ஆக்கிய அப்பத்தா.. இனி ஒரு ஆணியும் புடுங்க முடியாது

மேலும் ஜெனி இந்த வீட்டை விட்டு போக மனம் இல்லாமல் கண்ணீருடன் கிளம்புகிறார். மறுபுறம் பொண்டாட்டியை அனுப்பிவிட்டு புது மாப்பிள்ளையாக மாற இருக்கிறார் செழியன். அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கிறது என்ற பழமொழிக்கு ஏற்ப கோபியை உரித்து வைத்திருக்கிறார் அவரது மூத்த மகன் செழியன். அதாவது செழியனின் அலுவலகத்தில் மாலினி என்ற பெண் இவர் மீது ஈடுபாடு வைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே செழியன் அவரிடம் இருந்து விலக முயற்சி செய்தார். ஆனால் விடாமல் அந்தப் பெண் செழியனை துரத்துகிறார். மேலும் சபலத்தால் மாலினியின் காதல் வலையில் செழியன் சிக்க இருக்கிறார். பொண்டாட்டி இருக்கும் போதே இந்தப் பெண்ணுடன் மறைமுகமாக குடும்பம் நடத்த இருக்கிறார். இதனால் ஜெனியின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read : விஜய் டிவியை அட்ட காப்பி அடித்து சன் டிவி தொடங்கும் 2ம் பாகம்.. அவசர அவசரமாக முடிவுக்கு வரும் நாடகம்

கோபியின் வண்டவாளம் தான் இந்த ஊர், உலகமே அறிந்தது என்றால் அவருடைய மகன்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இப்போது செழியனின் இந்த நடவடிக்கையால் பாக்கியலட்சுமி குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க இருக்கிறது. பாக்யாவின் வளர்ப்பு எப்போதுமே தப்பா இருக்காது என்ற நினைப்பில் இருக்கிறார்.

ஆனால் நான் கோபியின் மகன் என்பதை நிரூபிக்கும் படியாக செழியனின் இந்த மட்டமான வேலை விரைவில் அம்பலமாக இருக்கிறது. ஆனால் பாக்யா போல் எல்லாத்தையும் விட்டுக் கொடுக்க ஜெனி தயாராக இருக்க மாட்டார். இவ்வாறு யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : வெள்ளித்திரையில் ஜொலிக்கும் 5 விஜய் டிவி பிரபலங்கள்.. ஜெயிலரால் ஏறிய நெல்சனின் மவுசு

- Advertisement -

Trending News