அண்ணனும் கைவிட்டாச்சு, நம்பிய படமும் கோவிந்தா.. பொன்னியின் செல்வன் 2 தான் நம்ம அஸ்திவாரம்

ஒரே ஒரு படத்தால் பிரபல ஹீரோ ஒருவருக்கு பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடித்து முடித்த படங்கள் எதுவும் பிசினஸ் ஆகவில்லை. இப்பொழுது வேறு விதமா யோசித்து வருகிறார் அந்த ஹீரோ. நாம் இரண்டு மூன்று கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தால்தான் படமோடும் என்ற ஐடியாவை இப்பதான் யோசித்து இருக்கிறார்.

ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த பூமி படம் அவருக்கு பெரிய அடியாய் அமைந்தது. அந்தப்படம் ஓடவில்லை. அதிலிருந்து அவருக்கு எந்த படமும் பிசினஸ் ஆகவில்லை. இப்பொழுது நடித்த அகிலன் படமும் கை கொடுத்ததாக தெரியவில்லை.

Also Read: கதை கேட்காமலேயே ஓகே சொல்லும் ஜெயம் ரவி.. உண்மை தெரியாமல் ஊர் சுற்றுவதால் நடந்த விபரீதம்

இந்தப் படம் வெளியான ஒரு வாரத்திலேயே தமிழ்நாடு முழுவதும் ஒரு சில திரையரங்கத்தை தவிர அனைத்து தியேட்டர்களிலும் பார்க்க ஆளில்லாமல், கடமைக்கு வைத்து ஓட்டி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் 2-வை மட்டுமே நம்பி இருக்கிறார் ஜெயம் ரவி.

அதுபோக இனிமேல் பல ஹீரோக்கள் சப்ஜெக்ட் சேர்ந்து நடித்தால்தான் படம் ஓடும் என்ற முடிவை எடுத்து அந்த மாதிரி கதையை கேட்டு வருகிறார் ஜெயம் ரவி. இனி ஜெயம் ரவியை சோலோ ஹீரோவாக பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் ஜெயம் ரவிக்கு சூப்பர் ஹிட் கொடுத்த தனி ஒருவன் படத்தை இயக்குவதிலும் அவருடைய அண்ணன் தயக்கம் காட்டுகிறார்.

Also Read: கருத்து கேட்டு கேட்டு நானே கருத்துட்டேன்.. அகிலன் படத்தை கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை மாறன்

மறுபுறம் பூமி, அகிலன் என வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் எல்லாம் படு தோல்வியை சந்திப்பதால் கடைசி அஸ்திரமாக வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை தான் மலை போல் நம்பி இருக்கிறார்.

‘ஒரு மாட்டுக்கு ஒரு சூடு’ என்கின்ற மாதிரி வரிசையாக ஜெயம் ரவியின் படங்கள் படு தோல்வியை சந்தித்துக் கொண்டிருப்பதால் மறுபடி மறுபடியும் ஹீரோவாக நடித்து அசிங்கப்படுவதை விட இனி கூட்டத்தோடு கூட்டமைக் கும்மாளம் போட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

Also Read: கடல் வழி மாஃபியாவின் நிஜ முகம் தான் அகிலன்.. எப்படி இருக்கு? முழு விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்