600 ரூபாய் சம்பளத்துக்கு 18 மணி நேர வேலை.. இந்தியர்களை பலிகிடா ஆக்கிய இந்துஜா குழுமத்தினர் என்ன செஞ்சாங்க தெரியுமா?

Brittain Hinduja: நம்மில் பலருக்கும் வெளிநாடுகளில் தங்கி வேலை செய்பவர்களை தெரியும். அவனுக்கு என்னப்பா லட்ச லட்சமா சம்பாதிக்கிறான், பங்களா மாதிரி வீடு கட்டிட்டா என்ற பேச்சை கேட்டிருப்போம். ஆனால் அங்கே கஷ்டப்படுபவர்களின் நிலைமை ஒரு சில நேரங்களில் செய்திகள் மூலமாக வெளியில் வரும்போது தான் இது என்ன கொடுமையான வாழ்க்கை என்று தெரியும்.

சமீபத்தில் குவைத்தில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் பலரும் உயிரிழந்தனர். அவர்கள் உடலை இங்கே கொண்டுவர நம் அரசாங்கம் பட்ட கஷ்டமே அதற்கு சாட்சி. ஸ்விட்சர்லாந்து நீதிமன்றம் நேற்று பிரிட்டனின் பெரிய பணக்கார குடும்பமான இந்துஜா குழுமத்தின் நிறுவனர் குடும்பத்திற்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.

அந்த நாட்டிலேயே பெரிய பணக்கார குடும்பம், அதுவும் அவர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். எதற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்று தோன்றலாம். இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவதற்காக தான்.

இந்துஜா குழுமத்தினர் என்ன செஞ்சாங்க தெரியுமா?

அதாவது இவர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பதால் எளிதாக இந்தியாவில் இருந்து ஆட்களை வீட்டுக்கு வேலைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். வந்த உடனேயே அவர்களுடைய பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொள்கிறார்களாம்.

அவர்கள் வீட்டுக்கு வேலைக்கு வரும் பணியாட்கள் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. பிரிட்டன் பண மதிப்பில் சம்பளம் கொடுக்காமல் இந்திய ரூபாயை தான் சம்பளமாக கொடுக்கிறார்கள்.

அதுவும் ஒரு நாளைக்கு 600 ரூபாய் தான் சம்பளம். ஆனால் கிட்டத்தட்ட 18 மணி நேரம் அவர்களை வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள். இதனால் தான் இந்த குடும்பம் கூண்டோடு மாட்டி இருக்கிறது. இதுவே நம்ம நாடாக இருந்திருந்தால் காசை வைத்து வெளியில் வந்திருப்பார்கள்.

வெளிநாடு என்பதால் சட்டபூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். வெளிநாட்டு வேலை என்றதும் யார் யாரையும் நம்பி அவசரமாக போவது என்பது ரொம்பவும் தவறான விஷயம். நம்மால் அங்கு இருக்கும் இந்திய தூதரகத்தை எந்த நேரத்திலும் அணுக முடியுமா என்பதை ஆராய்ந்து, தெரிந்த ஆட்கள் அருகில் இருக்கும் இடத்தில் இருப்பது தான் நல்லது.

Next Story

- Advertisement -