தக் லைஃப்-ல் கமலுக்கு ஜோடியான எவர்கிரீன் ஹீரோயின்.. 19 வருடத்திற்கு முன் உலக நாயகனுக்கு சுளுக்கு எடுத்தவராச்சே

Thug Life Movie Heroine: விக்ரம் படத்தின் மூலம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தனது 234-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் ஷூட்டிங் தற்போது நடைபெறுகிறது. இந்த படத்தின் டைட்டில் ‘தக் லைஃப்’ என மிரட்டலான டீசருடன் நேற்று வெளியானது.

இதில் கமலுடன் திரிஷா, நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்போது மூன்றாவதாக இன்னொரு நடிகை 19 வருடத்திற்கு பிறகு மறுபடியும் கமலுடன் இந்த படத்தில் ஜோடி போட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே உலக நாயகனை அடக்கி ஒடுக்கியவர்.

கமல் இயக்கி நடித்த விருமாண்டி படத்தில் உலகநாயகனுக்கு சுளுக்கு எடுத்தவர் தான் நடிகை அபிராமி. இவர் இந்த படத்தில் அன்னலட்சுமி என்ற கேரக்டரில் தனது மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டினார். இந்த படத்தில் அபிராமி உலக நாயகனை அடக்கி ஒடுக்கி தன் கைக்குள் வைத்திருப்பார்.

Also read: சிம்பு இடத்தை அசால்டாக தட்டி தூக்கிய வாரிசு நடிகர்.. மணிரத்தினம்-கமல் கூட்டணியில் என்ன ரோல் தெரியுமா?

‘குட்டி போட்ட பூனை போல்’ கமல் இந்த படத்தில் அபிராமி பின்னாடியே சுற்றி வந்தார். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அப்படிப்பட்டவர் இப்போது 19 வருடத்திற்கு பிறகு மறுபடியும் ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் ஜோடி போட்டிருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

மேலும் இதில் கமலின் கேரக்டரின் பெயர் ‘ரங்கராய சக்திவேல் நாயக்கன்’. இதில் சக்திவேல் என்பது தேவர்மகன் படத்தில் கமலஹாசன் கேரக்டர் என்பதும், நாயகன் என்பது நாயகன் படத்தின் வேலூர் நாயக்கர் கேரக்டரை குறிப்பது போன்று இருக்கிறது. இதனால் ‘தக் லைஃப்’ ஒரு கேங்ஸ்டர் படம் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

மேலும் 35 வருடத்திற்கு பிறகு கமல்- மணிரத்தினத்தின் கூட்டணி ‘தக் லைஃப்’ படத்தில் தரமான சம்பவத்தை செய்யப்போகின்றனர். இதில் கமல்ஹாசனின் எவர்கிரீன் ஹீரோயின் அபிராமியும் இணைந்து நடிக்கிறார் என்ற, இந்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also read: மருதநாயகம் போல தோற்றத்தில் வெறிகொண்டு வேட்டையாடும் வேலு நாயக்கர்.. முரட்டு சம்பவத்துடன் வெளிவந்த Thug Life வீடியோ

Next Story

- Advertisement -