ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு போட்டியாக தொடர் பிளாப் கொடுக்கும் ரீ என்ட்ரி குயின்.. இப்படியே போனா தல தப்பாது

Aishwarya Rajesh: ஐஸ்வர்யா ராஜேஷ் எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தனியாக போராடி ஜெயித்துக் காட்டியவர். ஆனால் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. தொடர்ந்து பிளாப் படங்களாகி வருகிறது.

அதாவது சாமி 2, மெய், நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, பர்கானா மற்றும் தீராத காதல் என தொடர்ந்து பிளாப் படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி தெலுங்கிலும் மூன்று படங்கள் நடித்த நிலையில் அதுவும் தோல்வியை தழுவியது.

Also Read : ஜொலிக்க முடியாமல் போன வெற்றி பட நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷ் போல் வளர முடியாத ஹீரோயின்

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தான் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார் என்றால் மற்றொரு பக்கம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள பிரபல நடிகை ஒருவரும் போட்டியாக தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் போல அவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதாவது ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட் மற்றும் தம்பி என தோல்வி படங்களாக தான் ஜோதிகா கொடுத்து வருகிறார்.

Also Read : 2 வருடங்களாக வாய்ப்பே தராத நடிகர்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த அதிரடி முடிவு

அதோடு மட்டுமல்லாமல் பொன்மகள் வந்தால் மற்றும் உடன்பிறப்பு என ஓடிடியில் வெளியான படங்களும் ரசிகர்களை பெரும் அளவில் கவர தவறிவிட்டது. மேலும் இப்படியே போனால் தலை தப்பாது என்று முடிவுக்கு வந்த ஜோதிகா மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டாராம்.

அங்கு எப்போதுமே வயதானாலும் மார்க்கெட் இருக்கும். அதன்படி ஜோதிகாவை பாலிவுட் சினிமா தூக்கிவிடும் என்ற நம்பிக்கையில் இறங்கி இருக்கிறார். மேலும் பாலிவுட் கை கொடுத்தால் மட்டுமே ஜோதிகாவால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். மேலும் இதற்காக உடல் எடையை கடுமையாக ஜோதிகா குறைத்து வருகிறார்.

Also Read : பொட்டிப் பாம்பாக மாறிய சூர்யா.. முழுசாக தன் பக்கம் இழுத்த ஜோதிகா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்