2 வருடங்களாக வாய்ப்பே தராத நடிகர்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த அதிரடி முடிவு

Actress Aishwarya Rajesh: சின்னத்திரையில் அசத்தப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை முன்னணி நடிகையாக நிலை நிறுத்த போராடிக் கொண்டிருக்கிறார். இவர் அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, அதன் பின் காக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களுக்கு அம்மாவாக எந்த தயக்கமும் இன்றி நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.

காக்கா முட்டை படம் வெளியான போது பலரும் அவரை பாராட்டினார்கள். அதனால் அந்த படத்திற்கு பிறகு தனக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கும் என நம்பினார். ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு 2 வருடம் வாய்ப்பு இல்லாமல் விரத்தியில் இருந்திருக்கிறார். அதன் பிறகு தான் அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே நடிப்பேன் என்ற அதிரடி முடிவை எடுத்தார்.

Also Read: பெயர் சொல்லாமல் மனதில் நின்ற 5 கதாபாத்திரங்கள்.. ரஜினியை வைத்து கே எஸ் ரவிக்குமார் வைத்த ட்விஸ்ட்

இவர் சமீப காலமாக எந்த டாப் நடிகர்களுடனும் ஜோடி சேராமல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்குக் காரணம் என்ன என்பதை சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் போட்டு உடைத்திருக்கிறார்.

இவருக்கு திடீரென்று இந்த மாற்றம் வர காரணம் என்ன என கேட்டபோது இதுவரை தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே அவர்களது படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். மற்ற நடிகர்கள் எல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷை புறக்கணிப்பதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்.

Also Read: ஐஸ்வர்யா ராஜேஷை டீலில் விட்டு தவிக்கவிடும் பெரிய நடிகர்கள்.. புலம்பிக்கொண்டு விரக்தியில் எடுத்த முடிவு

அதுமட்டுமல்ல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கூட அவரை ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பெரிய பட்ஜெட் படங்களிலும் சரி, டாப் ஹீரோக்களின் படங்களிலும் சரி தன்னுடைய பெயர் இடம் பெற்றாலும் அதை தூக்கி விடுகிறார்கள் என்றும், அவருக்கு பதில் வேற ஸ்டேட் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பட வாய்ப்புகள் மட்டுமே தேடி வருகிறது. இருப்பினும் அதிலும் தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிகாட்டுகிறார். அப்படி இதுவரை ஐஸ்வர்யா ராஜேஷ் 15 படங்கள் நடித்திருக்கிறார். தற்போது வரை ஐஸ்வர்யா ராஜேஷ் அதே போன்ற படங்களில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவருக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு இன்றும் வருவதில்லை. இதற்கெல்லாம் சினிமாவில் இருக்கும் அரசியல் தான் காரணம் என குற்றம் சாட்டுகிறார்.

Also Read: உனக்கெல்லாம் ஃப்ரெண்ட் ரோல் கூட கிடைக்காது.. அசிங்கப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குவியும் விருதுகள்

Next Story

- Advertisement -