வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்து பாலிவுட்டில் செட்டிலான 6 நடிகைகளின் லிஸ்ட் இதோ

இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகைகளுக்கென தனி மவுசு உலகளவில் உண்டு. அவர்களின் நடிப்பு முதல் சம்பளம் வரை மற்ற மொழி நடிகைகளை காட்டிலும் சற்று முக்கியத்துவம் அதிகம் தான். அப்படி பாலிவுட் நடிகைகள் எத்தனையோ பேர் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்கள்.அதில் ஒரு சில நடிகைகள் தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு, பின்னர் ஒரேடியாக பாலிவுட்டில் செட்டிலாகியுள்ளனர். அப்படிப்பட்ட 6 நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

சுஷ்மிதா சென்: பாலிவுட் நடிகையான இவர், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யூனிவெர்ஸ் பட்டத்தை வென்றவர். மேலும் இந்தியா சார்பில் முதன் முதலில் அப்பட்டதை வென்ற முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அந்த வகையில் தமிழில் இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கத்தில் வெளியான ரட்சகன் திரைப்படத்தில் நடிகர் நாகர்ஜூனாவுடன் ஜோடிப் போட்டு நடித்தார் சுஷ்மிதா சென். இப்படத்தில் இடம்பெற்ற சந்திரனை தொட்டது யார் பாடலில் இவரது நடனம் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்தமானது.

Also Read: பாலிவுட் நடிகைகளுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் பாபநாசம் நடிகை.. 20 வயதில் இவ்வளவு கிளாமரா!

கஜோல்: பிரபல பாலிவுட் நடிகையான கஜோல் 40 வயதை தாண்டியும், தற்போது வரை சில படங்களில் கமிட்டாகி கதாநாயகியாக நடித்து வருகிறார். 90 களில் இவர் நடிகர் ஷாரூக்கானுடன் ஜோடிப் போட்டு நடித்த படங்கள் மாபெரும் ஹிட்டான நிலையில், தமிழில் 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் பிரபுதேவாவுடன் இவர் ஆடிய வெண்ணிலவே பாடல் ரசிகர்களை தற்போது வரை ஈர்த்துள்ள பாடலாகும்.

இஷா டியோல்: பாலிவுட்டில் கனவு கன்னியாக வலம் வந்த இஷா டியோல், பல ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற நெஞ்சமெல்லாம் காதல் பாடலுக்கு இவர் வெட்கப்பட்டுக் கொண்டே சிரிக்கும் காட்சிக்கு இன்று வரை ரசிகர்கள் அதிகம்.

ராணி முகர்ஜி: ஷாருக்கான்,அபிஷேக்பச்சன் என பல முன்னி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்த நடிகை ராணி முகர்ஜி, தமிழில் கமலஹாசனின் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான ஹே ராம் படத்தில் கமலுக்கு ஜோடியாக அபர்ணா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் இவர் முகத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததாக ஒரு முறை பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் நீ பார்க்கும் பார்வைக்கு நன்றி என்ற பாடல் முழுவதும் கமலுடன் இணைந்து முத்த காட்சிகளில் நடித்திருப்பார்.

Also Read: செக் இல்ல பணப்பெட்டியோடு வந்தா பாருங்க.. அஜித், விஜய்யை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கஜானாவை நிரப்பும் நடிகர்

ப்ரியங்கா சோப்ரா: 2000 ஆம் ஆண்டி உலக அழகி பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா முதன் முதலில் தமிழ் படத்தில் தான் கமிட்டானார். நடிகர் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா, இப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா, இன்றளவும் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை மறக்கவில்லை என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி: நடனத்தை வைத்தே இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்த ஷில்பா ஷெட்டி, தற்போது திருமணம், குழந்தை பெற்றெடுத்த போதிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஜுட்ஜாக வலம் வந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். பல ஹிந்தி படங்களில் முன்னனி நடிகர்களுடன் நடித்த ஷில்பா ஷெட்டி 1999 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஒவ்வொரு பாடலும் ஹிட்டான நிலையில், ஷில்பா ஷெட்டி ஆடிய நடனத்தை பார்க்கவே அன்றைய ரசிகர்கள் திரையரங்களில் படையெடுத்தனர்.

Also Read:  தீ விபத்தில் மாட்டிய நடிகையை அம்போவென விட்டு சென்ற பிரபுதேவா.. உயிர் பயத்தை காட்டிய சம்பவம்

- Advertisement -

Trending News