இனி நாங்க தான் டாப்புன்னு கெத்து காட்டும் 5 நடிகைகள்.. கன்னத்துக்குழியில் விழ வைத்த சித்தி

ஹீரோயின்களை பொறுத்தவரை ஒரு படத்தில் நடித்து வெற்றி கண்ட பிறகு, மீண்டும் தன் நடிப்பினை தொடர்வது என்பது எளிதல்ல. ஒரு சில ஹீரோயின்களே அவ்வாறு நிலைத்து நிற்கின்றனர். மேலும் இவர்கள் தன் அழகாலும், நடிப்பாலும் கிடைக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இக்காலகட்டத்தில் ஒவ்வொரு படங்களுக்கும் ஒவ்வொரு புதுமுக ஹீரோயின்கள் இறக்கிக் கொண்டே இருக்கின்றார்கள் இயக்குனர்கள். மேலும் இக்கால ட்ரெண்ட் ஏற்ப இவர்களின் நடிப்பிற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாறு தன் வெற்றியைக் கொண்டு இனி நாங்கள் தான் என சொல்லிக் கொள்ளும் 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: இளவட்ட வயசில் துருவ் செய்யும் மட்டமான வேலை.. உச்சகட்ட கவலையில் இருக்கும் விக்ரம்

இவானா: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மேலும் பல மலையாள படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருக்கிறார். நாச்சியார் படத்தில் நடித்த இவர் 2022-ல் இக்கால காதலை சொல்லும் படமாக வெளிவந்த லவ் டுடே படத்தின் கதாநாயகியாக நடித்திருப்பார். இப்படத்தில் இவரின் நடிப்பு படத்திற்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. இதை தொடர்ந்து பல படங்களில் கால்ஷீட் கொடுத்து வருகிறார் இவானா.

அபர்ணாதாஸ்: இவர் மலையாள மொழி படங்களில் தன் நடிப்பினை தொடங்கியவர். அதன்பின் பீஸ்ட் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து அண்மையில் வெளிவந்த டாடா படத்தில் முக்கிய கதாநாயகியாக அசத்திருப்பார். இவரின் எதார்த்தமான நடிப்பு மேலும் பல வாய்ப்புகளை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இவ மானங்கெட்ட கேள்வி கேட்டாலும் கோபமே வர மாட்டேங்குது.. குணசேகரன் பம்மும் ஒரே ஆன்ட்டி

பாவனா ஸ்ரீ: தன் திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவில் நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். இது என்ன மயக்கம், சில சமயங்களில் என்னும் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இதைத்தொடர்ந்து விடுதலை படத்தில் தமிழரசியாக தன் எதார்த்தமான நடிப்பினை வெளிப்பாட்டிருப்பார். இப்படத்தின் மூலம் இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

மீதா ரகுநாத்: இவர் தமிழ் திரையில் பணிபுரியும் மாடல் மற்றும் நடிகை ஆவார். இவர் முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். தற்பொழுது வெளிவந்த குட் நைட் படத்தில் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். இவரின் எளிமையான நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்தது.

Also Read: குடும்ப குத்து விளக்குனு நினைச்சா.! கண்றாவியா போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை

சித்தி இட்னானி: இவர் குஜராத்தி படங்களின் மூலம் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர். அதன்பின் தெலுங்கில் சில படங்கள் நடித்து இருக்கிறார். மேலும் தமிழில் 2022ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்திருப்பார். இவர் தன் கன்னத்துக் குழியால் பல இளைஞர்களை சொக்க வைத்து வருகிறார். மேலும் பல படங்களில் கால்ஷீட் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -