வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இசை புயல், இசைஞானி எனப் புகழப்பட்ட இசையமைப்பாளர்.. சொந்த வாழ்க்கையால் திசை மாறிய கொடுமை

Tamil Music Director: சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் என்ன செய்தாலும் அது எளிதில் தெரிந்துவிடும். அவர்களது சொந்த  வாழ்க்கையில் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் நடந்திருந்தால் அதை வைத்தே அவர்களை ஓரம் கட்டி விடுவார்கள். அதிலும் இந்த இசையமைப்பாளரை தான் அடுத்த இசை புயல், இசைஞானி என புகழ்ந்தார்கள். அந்த அளவிற்கு இவருடைய பாடல்கள் எல்லாம் மனதை வருடும் அளவுக்கு இருக்கும்.

அப்படி முன்னணி இசையமைப்பாளராக இருந்து இன்று காணாமல் போன பிரபல  இசையமைப்பாளர் தான் டி இமான். தமிழ் சினிமாவிற்கு நிறைய சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். எல்லாரும் இவரை இன்னொரு  ஏஆர் ரகுமான், இளையராஜா என்று புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால் இன்று இருக்கிற இடம் தெரியவில்லை.

Also Read: ஏலியன் துணையோடு எதிரியை வேட்டையாடும் சிவகார்த்திகேயன்.. மிரட்டும் அயலான் டீசர்

டி இமான் ஒரு சிறந்த இசையமைப்பாளர். இவர் இசையமைத்த படங்களில் நிறைய சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். அதிலும் குறிப்பாக கும்கி, நம்ம வீட்டு பிள்ளை என்று ஏகப்பட்ட ஹிட்ஸ் கொடுத்திருக்கிறார். இவர் வளரும் இளம் நடிகராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு நிறைய சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து அவரை உச்ச நாயகனாகவும் மாற்றிவிட்டார். ஆனால் டி இமானுக்கு இப்போது சுத்தமாவே வாய்ப்பு கிடைக்கலை.

காரணம் இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணத்தை சத்தமே இல்லாமல் செய்து கொண்டதுதான். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிகா என்பவரை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 13 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையை உடைத்து விட்டு இருவரும் பிரிந்தனர்.

Also Read: உதயநிதி மறுத்ததால் ஜெயம் ரவியுடன் கமிட்டான கிருத்திகா.. விஜய் சேதுபதி பட சாயலில் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு

அதன் பின்பு உடனே டி இமான் பிரபல நடிகர் உபால்டின் மகளான அமலியாவை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொள்ளும்போது 2வது மனைவிக்கு 10 வயதில் ஒரு மகள் இருந்தார். பெத்த ரெண்டு பிள்ளைகளையும் முதல் மனைவியிடம் விட்டுவிட்டு  இரண்டாவது திருமணத்தில் மனைவிக்கு முதல் கணவருடன் பிறந்த மகளை தத்தெடுத்துக் கொண்டது சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இவருடைய சொந்த வாழ்க்கை குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்ததால் தான் அவர் சேர்த்து வைத்த மொத்த பேரும் வீணாய் போயிருச்சு. இவரின் தனிப்பட்ட வாழ்க்கையால் தான் பிரபல இசையமைப்பாளராக இருந்த இவருடைய இசை பயணமே திசை மாறிய கொடுமை நிகழ்ந்துள்ளது.

Also Read: என்னையும் ஏஆர் ரகுமானையும் தொடர்பு படுத்திய பொய்யான வதந்தி.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி

- Advertisement -

Trending News