பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவர்தான்.. அசீமை வீழ்த்த கடுமையாக போராடும் போட்டியாளர்

வரும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். இதனால் கிளைமாக்ஸில் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் அனுதினமும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென்று கதிர், 3 லட்ச பண முட்டையை எடுத்துக் கொண்ட வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து 8 லட்ச பணப்பெட்டியுடன் அமுதவாணன் வெளியேறுகிறார். மீதம் இருக்கும் அசீம், விக்ரமன், மைனா, சிவின் ஆகிய நான்கு பேரில் யாருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதில் மக்கள் ஓட்டு அடிப்படையில் கடைசி இடத்தில் மைனா நந்தினி இருக்கிறார்.

Also Read: இளவு காத்த கிளியாக காத்துக் கொண்டிருந்த அமுதவாணன்.. ஜிபி முத்துவால் சாதுரியமாக பணத்தை தூக்கிய போட்டியாளர்

இதனால் டைட்டில் வின்னர் ஆவதற்கு திருநங்கை ஆன சிவின் தன்னால் முடிந்த அளவுக்கு தன்னுடைய முழு ஈடுபாட்டையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுத்து கொண்டிருக்கிறார்.  முதல் இரண்டு இடத்தில் அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் கடும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் விக்ரமன் சக போட்டியாளர்கள் யாருடைய மனமும் புண்படாத வகையில் தொடக்கத்தில் இருந்தே இப்போது வரை மரியாதையுடன் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனால் நாளுக்கு நாள் அவருக்கு பிக் பாஸ் ரசிகர்களிடம் ஆதரவு பெறுகிறது. அதிலும் முக்கியமாக அசீமை பல இடங்களில் கட்டுப்படுத்தியதும் விக்ரமன் தான். அதே சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்க செய்த அசீம் ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும், அவர்தான் இந்த சீசனின் கன்டென்ட் கொடுக்கும் கண்டஸ்டண்டாகவே இருந்தார்.

Also Read: பண மூட்ட கதிருக்கு பணப்பெட்டி யாருக்கு? மீண்டும் காசு மழை கொட்டும் பிக் பாஸ் வீடு

இதனால் விக்ரமனுக்கு இருக்கும் அதே ஆதரவுடன் அசீமும் சம பலத்துடன், டைட்டில் வின்னர் ஆக கூடிய ரேசில் கடும் போட்டியாக நிற்கிறார். இருப்பினும் அவரிடம் இருக்கும் சில குணங்கள் பலரையும் எரிச்சல் அடைய வைத்தது. ஏனென்றால் நிகழ்ச்சி முழுவதும் அன்றாட டாஸ்காக பிறரை தாழ்த்தி பேசுவதும் அடிக்கடி கத்தி பேசி எதிரில் நிற்பவரை அசிங்கப்படுத்துவது போன்றவற்றை அசால்டாக செய்தார்.

இதனால் பலமுறை ஆண்டவரிடமும் வாங்கி கட்டிக் கொள்வார். எனவே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வின்னர் ஆவதற்கு மட்டுமல்லாமல் அசீமை வீழ்த்த கடுமையாக விக்ரமன் மற்றும் சிவின் இருவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் இதுவரை கிடைத்த தகவலின் படி விக்ரமன்தான் பிக் பாஸ் டைட்டில் வின்னராவார் என்றும் அடித்து செல்கின்றனர்.

Also Read: மதத்தை வைத்து அசிங்கப்படுத்திடீங்க .. கொந்தளித்த பிக் பாஸ் நடிகை