பிக் பாஸ் சீசன் 4-ன் டைட்டில் வின்னர் யார் தெரியுமா.? ரசிகர்களின் 70% வாக்குகளை தட்டி தூக்கிய ஒரே போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, இன்னும் ஒருசில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில் யார் வெற்றியாளர் என்பதை தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

மேலும் பிக் பாஸ் வெற்றியாளரை தேர்வு செய்வது, ரசிகர்களின் ஓட்டு என்பதால், இன்னும் ஒரு சில தினங்களே மக்கள் ஓட்டு போடுவதற்கு கால அவகாசம் இருப்பதால் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நடிகர் ஆரி மட்டும் மக்களிடம் இருந்து, 70 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

ஏனைய 30 சதவீத வாக்குகளை மற்ற போட்டியாளர்களுக்கு கிடைத்துள்ளது.  இருப்பினும் அதிக வாக்குகள் நடிகர் ஆரிக்கு கிடைத்துள்ளதால், இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகுவதற்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

bb4-vote-cinemapettai

குறிப்பாக இரண்டாவது இடத்தில் இருக்கும் பாலாஜிக்கும், முதலிடத்தில் இருக்கும் ஆரிக்கும் அதிக வேறுபாடு நிலவி வருகிறது. மேலும் மூன்றாவது இடம் ரம்யாவிற்கும், நான்காவது இடம் ரியோவிற்கும்,

ஐந்தாவது இடம் சோம் சேகருக்கும், கடைசி இடம் கேப்ரில்லாவிற்கும் மக்கள் அளித்துள்ள ஓட்டின் அடிப்படையில் கிடைத்துள்ளது. எனவே பிக் பாஸ் சீசன்4 டைட்டில் வின்னர் யார் என்பதை வரும் ஞாயிற்றுக்கிழமை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்