வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

உண்மையான மாமன்னன் அவர்தான்.. உதயநிதி படத்தின் அசல் ஹீரோ

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் படம் மாமன்னன். இப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்றெல்லாம் இணையத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் மாமன்னன் படத்தை தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் அழக பெருமாள் மற்றும் பகத் பாசில் போன்றவர்களும் நடித்து வருகிறார்களாம்.

மேலும் மாமன்னன் படத்தில் நிறைய நாய்கள், பன்றிகள் போன்ற வளர்ப்பு விலங்குகளை வைத்து எடுத்துள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் வடிவேலு நடிக்கிறார் என்ற தகவல் முன்பே வெளியாகியிருந்தது.

வடிவேலு தற்போது கதாநாயகனாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மாமன்னன் படத்தில் உதயநிதியின் அப்பா கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து வருகிறாராம்.

மாமன்னன் படத்தில் வடிவேலின் கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் உண்மையான மாமன்னன் என்றால் அது வடிவேலுதான் என கூறிவருகிறார்கள். இதனால் வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாமன்னன் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைக்கிறார். மேலும் மாமன்னன் படத்தை குறித்த அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.

- Advertisement -

Trending News