ஆதிக்கின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் நபர்.. குட் பேட் அக்லி இவரை நம்பி தான் இருக்கு

Adhik Ravichandran: கல்யாணம் நடந்த நேரம் மாப்பிள்ளைக்கு நல்ல யோகம் தான். அப்படித்தான் ஆதிக் ரவிச்சந்திரனை பற்றி பலரும் பேசி வருகின்றனர்.

மார்க் ஆண்டனி என்ற வெற்றி படத்தை கொடுத்த கையோடு சிவாஜி குடும்பத்து மருமகன் ஆனார். அதைத்தொடர்ந்து தற்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் இதன் அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது பட வேலைகளில் இவர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறாராம். அதிலும் ஒருவரை நம்பித்தான் இந்த படமே இருக்கிறதாம்.

அவர் வேறு யாரும் கிடையாது ஆதிக்கின் தந்தை ரவிச்சந்திரன் தான். ஆதிக் எப்போதுமே ட்ரெண்டியான படங்களை இயக்குவதை தான் விரும்புவார்.

ஆதிக் வெற்றிக்கான காரணம்

அதேபோல் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் அப்டேட் ஆகவும் இருப்பார். சில படங்களில் அவர் சறுக்கினாலும் அஜித் இவரை நம்பி வாய்ப்பு கொடுத்திருப்பதற்கு அவர் அப்பாவும் ஒரு காரணம்.

பலரிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்த இவர் தன் மகனிடமும் உதவியாளராக தான் இருக்கிறார். சுருக்கமாக சொல்லப்போனால் இவருடைய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை தான் ஆதிக்கை கை தூக்கி விடுகிறது.

அந்த வகையில் குட் பேட் அக்லி படத்திற்கும் இவர் நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் அஜித்தை இயக்குவதால் மகன் கூடவே இருந்து பார்த்துக் கொள்ளவும் போகிறாராம்.

சுருக்கமாக சொல்லப்போனால் குட் பேட் அக்லி இவரை நம்பி தான் இருக்கிறது. ஆக மொத்தம் அடுத்த வருட பொங்கல் அஜித் ராஜ்யமாகத்தான் இருக்கும்.

 

Next Story

- Advertisement -