பிக் பாஸ் அசீம் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா.. வெளியான வைரல் புகைப்படம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் விஜய் டிவியைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் அசீம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடரில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அந்தத் தொடரில் பிக் பாஸ் ஷிவானி உடன் அசீம் ஜோடி போட்டு நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியிலேயே பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். இந்த சூழலில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். கதை சொல்லும் டாஸ்க்கில் அசீம் தனது சொந்த வாழ்க்கையை பற்றி பேசினார்.

Also Read :வன்மத்தால் வீழ்த்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. மக்கள் அவரைக் காப்பாற்றுவார்களா?

அதாவது நான் சினிமா துறையை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டுதான் எனது மனைவி என்னை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்தோம். அப்போதுதான் என் மகன் பிறந்தான் என்று அசீம் உருக்கமாக பேசி வந்த சூழலில் ஹவுஸ் மேட்ஸ் கதையை சொல்லவிடாமல் பஸரை அழுத்தி விட்டனர்.

இதைத்தொடர்ந்து சிலர் கேட்டுக் கொண்டதால் அவர்களிடம் அசீம் கதையை தொடர்ந்து சொன்னார். அதாவது என் மனைவியும் நானும் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால் விவாகரத்து பெற்ற பிரிந்தோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கண்டிப்பாக தன் மகனுடன் நான் இருக்க வேண்டும் என்பதை அசீம் கேட்டுக் கொண்டாராம்.

Also Read :விவாகரத்து பின் மகளுக்காக ஏங்கும் ராபர்ட் மாஸ்டர்.. பிக் பாஸ் வீட்டில் கதறி அழுததின் பின்னணி இதுதான்

இவ்வாறு தன்னுடைய கதையை மிகுந்த மனவேதனையுடன் அசீம் கூறியிருந்தார். இந்நிலையில் அசீம் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவ்வளவு அழகான குடும்பம் சேர்ந்தே வாழலாம் என்று அசீம் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

முன்னாள் மனைவியுடன் அசீம்

Azeem-with-his-ex-wife

மகனுடன் பிக் பாஸ் அசீம்

azeem-with-his-son

Also Read :வீட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஜிபி முத்து.. மொத்த டிஆர்பி-யும் போயிடும் என கெஞ்சும் பிக் பாஸ்

- Advertisement -