ஜிவி பிரகாஷுக்கு அடுத்தடுத்து விழுந்த மரண அடி.. தெளிவில்லாமல் கோட்டை விடும் குட்டி தம்பி

GV Prakash : ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்தவரை அவரது கொடி ஓங்கிப் பறந்தது. இந்நிலையில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

அதன்படி அவருடைய டார்லிங் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஜிவி பிரகாஷின் படங்கள் எதுவும் போகவில்லை.

ஆனால் சமீபகாலமாக வருஷத்திற்கு ஆறு முதல் ஏழு படங்களில் நடித்து வருகிறார். இந்த வகையில் இரண்டு வாரங்களுக்கு முன் ஜிவி பிரகாஷின் நடிப்பில் ரெபல் என்ற படம் வெளியாகி இருந்தது.

இரண்டே வாரத்தில் ஒரு ஓடிடிக்கு வந்த ரெபல்

இப்போது இந்த படத்திற்கு தியேட்டரில் பெரிய அளவில் கூட்டம் எதுவும் இல்லை. அதனால் படம் வெளியான 2 வாரத்தில் இப்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அடுத்ததாக இந்த வாரம் ஜிவி பிரகாஷின் கள்வன் படம் வெளியாகியிருக்கிறது.

இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் தான் பெற்று வருகிறது. படத்தில் பாரதிராஜா மற்றும் இவானா நடிப்பு மட்டும்தான் பெரிய அளவில் பேசப்பட்டு உள்ளது.

சரியான கதை தேர்வு இல்லாமல் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கோட்டை விட்டு உள்ளார்.

அடுத்த வாரம் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஜிவி பிரகாஷ் இணைந்து நடித்துள்ள டியர் படம் வெளியாகிறது. அதாவது ஜிவி பிரகாஷுக்கு வெற்றியை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story

- Advertisement -