அந்த விஜய் சேதுபதி பட ஹீரோயின் தான் வேண்டும்.. அடம்பிடித்து தூக்கிய ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். ஒரு இசையமைப்பாளர் நடிகராக மாறி அதிக படங்களில் நடித்தது இவராகத்தான் இருக்கும்.

குறைந்தது வருடத்திற்கு ஐந்து முதல் பத்து படங்கள் வரை நடித்து ரிலீஸ் செய்து வருகிறார். ஆனால் இதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. இருந்தாலும் இவருக்கு எப்படி பட வாய்ப்புகள் குவிகிறது என்பது புரியாத புதிர்தான் என்கிறது சினிமா வட்டாரம்.

பெரும்பாலும் ஜிவி பிரகாஷின் படங்களில் அடல்ட் காமெடிகள் அதிகம் இருப்பதால் இளைஞர்களை கவரும் என்ற நோக்கத்தில் அவரை வைத்து அதே மாதிரியான படங்களை எடுத்து வருகின்றனர்.

ஆனால் அதையெல்லாம் பாலாவின் நாச்சியார் படம் மாற்றியது. ஜிவி பிரகாஷுக்கும் நன்றாக நடிக்கத் தெரியும் என்பதை நிரூபித்துக் காட்டிய திரைப்படம். அதனைத் தொடர்ந்து பிச்சைக்காரன் சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படமும் ஜிவி பிரகாஷுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

அதன் விளைவு அடுத்ததாக வசந்தபாலன், சீனு ராமசாமி போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக சீனு ராமசாமி ஜிவி பிரகாஷ் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஏற்கனவே அவரது படங்களில் பணியாற்றிய காயத்ரி இருந்தால் நன்றாக இருக்கும் என ஃபீல் பண்ணியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

காயத்ரி ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் பல படங்களில் ஜோடி போட்டார். அவருடன் அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் முறையாக ஜிவி பிரகாஷ் காயத்ரி ஜோடி என்பதால் இந்த படத்தின் மீது கணிசமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

gayathri-cinemapettai
gayathri-cinemapettai

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -