முத்திரை குத்திய இயக்குனர்கள்.. விழி பிதுங்கி நிற்கும் ஜிவி பிரகாஷ்

ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, காலப்போக்கில் ஒரு முழுநேர ஹீரோவாகவே நடிக்க ஆரம்பித்து விட்டார் ஜிவி பிரகாஷ் . தொடக்கத்தில் சர்ச்சைக்குரிய படங்களிலும் அடல்ஸ் படங்களிலும் தேடித் தேடி நடிக்கும் நடிகராக தெரிந்த ஜிவி பிரகாஷ், அதன்பிறகு நல்ல கதை கொண்ட படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

இவர்  எல்லாரிடமும் பக்கத்து வீட்டு பையன் போல் எதார்த்தமாக நடந்து கொள்வாராம். இதனால் இயக்குனர்களை பொறுத்தவரை ஜிவி பிரகாஷ் தான், எல்லா படங்களிலும் பிரச்சினை இல்லாமல் நடித்துக் கொடுப்பார். சம்பளமும் அதிகமாக கேட்க மாட்டார்.

இதனால் நண்பர்கள் போல் வந்து நிறைய பேர் கதை சொல்லிவிட்டு செல்கிறார்களாம். புதுமுக இயக்குனர்களின் முதல் தேர்வு ஜிவி பிரகாஷ் தான். எளிதாக அவரை சந்திக்கலாம், சம்பளமும் அவ்வளவு அதிகமாக வாங்குவதில்லை. இவர் கமிட்டாகி நடிக்கும் படங்களும் நஷ்டத்தை பெற்று தராமல் போட்ட காசுக்கு ஏற்று லாபத்தை பெற்றுத் தந்து விடுகிறது.

மேலும் இவர் எந்த இயக்குனர் கதை சொன்னாலும் மறுப்பதே இல்லையாம். அப்படி இவர் நடிக்காவிட்டால் வேறு ஒருவரை பரிந்துரை செய்து, அப்படி பண்ணுங்கள், இப்படி பண்ணினால் நல்லா இருக்கும் என்று அவரே ரூட் போட்டுக் கொடுத்து விடுகிறாராம். சமீபகாலமாகவே ஜிவி பிரகாஷ் பெரிய மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.

தன்னை தேடி வருகிற எல்லா இயக்குனர்களும் பல கதைகளை வைத்திருக்கிறார்களாம். இவர் எளிதில் நடிக்க சம்மதித்து விடுவார் என்று அவர்கள் இவர் மீது ஒரு முத்திரையை வைத்திருக்கிறார்கள். அதனால் இவர் இப்பொழுது என்ன செய்வது எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருக்கிறார்.

அதனால் இவரை பூபதி பாண்டியனிடம் சென்று ஒரு காமெடி படம் பண்ணலாம் என்று கதை கேட்டு வருகிறாராம். பூபதி பாண்டியன் காமெடி படம் பண்ணுவதில் வல்லவர் இவர் வின்னர், கிரி போன்ற படங்களுக்கு வசன கர்த்தாவாக செயல்பட்டிருக்கிறார். இப்பொழுது பூபதி பாண்டியன்-ஜிவி பிரகாஷ் இருவர் கூட்டணியில் காமெடி படம் ஒன்று உருவாக இருக்கிறது.

Next Story

- Advertisement -