சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எஸ் கே ஆர் ஐ எதிர்க்க குணசேகரன் போடும் சூழ்ச்சி.. கம்பீர தெனாவட்டில் ஞானம் நடந்து கொண்ட விதம்

சீரியல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நம்பர் ஒன் சீரியல் எதிர்நீச்சல் மட்டும் தான். குடும்பத்தில் இருக்கும் இல்லத்தரசிகளின் மனதில் இருக்கும் ஆதங்கத்தை அவர்கள் சொல்வது போல அமைந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது குணசேகரன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போவார் என்பதை உணர்த்தி வருகிறார்.

அதற்காக ஒரு புதிய திட்டத்தை தீட்டி இருக்கிறார். யாரையுமே மதிக்காமல் நான்தான் பெரிய கொம்பன் என்ற அகம்பாவத்தில் இருந்த குணசேகரன் திடீரென்று இப்படி மாறுவது தம்பியின் மேல் இருந்த பாசம் எதுவும் கிடையாது. எஸ் கே ஆர் மற்றும் ஜனனியை பழி வாங்குவதற்கு கதிர் மற்றும் ஞானம் சப்போர்ட் தேவைப்படும் என்று உணர்ந்து அவர்களை பகடைக்காயாக பயன்படுத்தப் போகிறார்.

Also read: ஞானத்திடம் கெஞ்சி கூத்தாடிய குணசேகரன்.. ஆம்பளைங்களே இல்லையா என அசிங்கப்படுத்திய மருமகள்

ஆனால் ஞானம் உண்மையான பாசத்துடன், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதை நிரூபித்து விட்டார். அண்ணன் விரித்த வலையில் ஞானம் மாட்டிக் கொண்டு பழையபடி மனைவியும், பிள்ளைகளையும் எடுத்தெறிந்து பேசி வருகிறார். கொஞ்சமாவது திருந்துவார் என்று நினைத்தால் குணசேகரனை விட ஒரு படிக்கு மேலே போய் இது அண்ணன், தம்பிக்கு நடக்கும் பிரச்சனை குறுக்கே நீ ஏன் வருகிறாய் வந்தால் பல்லை உடைத்து விடுவேன் என்று அதிகார தோரணையில் கர்வமாய் நடந்து கொள்கிறார்.

இது போதுமே குணசேகரனுக்கு இதைதானே அவர் எதிர்பார்த்து இவ்வளோ பெரிய காய் நகர்த்தி இருக்கிறார். இனிமேல் தான் குணசேகரனின் ஆட்டம் சூடுபிடிக்க போகிறது. வலது கையில் ஞானம் மற்றும் இடது கையில் கதிர் என்று முழு பலத்துடன் இருந்து பழையபடி எல்லாரையும் ஆட்டி படைக்கப் போகிறார்.

Also read: பூமர் அங்கிளையே பொளந்து கட்டிய வில்லங்கமான பார்ட்டி.. எதிர்நீச்சலில் அண்ணனை காப்பாற்றுவாரா தம்பி?

ஆனால் குணசேகரன் இதோடு நிறுத்திக் கொண்டால் ஓகே. அதை விட்டுவிட்டு சக்தியும் அவர்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று ஒரு பொய்யான பாச ட்ராமாவை போட்டுவிட்டால் சக்தியும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு இயக்குனர் கதையை கொண்டு போக மாட்டார் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையில் ஜனனி, சக்தி, மற்றும் மற்ற மருமகள் சேர்ந்து எப்படியாவது அருண், ஆதிரை திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைப்போம் என்று உறுதியாக இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் இயக்குனர் கதையை நகர்த்திக் கொண்டு போவது தான் இந்த நாடகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பிளஸ்.

Also read: குணசேகரன் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியை கிளப்பிய வைரல் புகைப்படம்

- Advertisement -

Trending News