Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் ஒட்டுமொத்த அட்டூழியத்தின் மறு உருவமாக இருக்கிறார். அந்த வகையில் எப்போதோ நடந்த மனைவியின் பொண்ணு பார்த்த சம்பவத்தை வைத்து எந்த அளவுக்கு கீழ்த்தரமாக குடும்பத்தின் முன் பேச முடியுமோ அந்த அளவிற்கு தரங்கெட்டு போய் வார்த்தையால் தாக்குகிறார்.
இவர் பேசியது மட்டும் அல்லாமல் சாட்சிக்கு மகன் மகளையும் இழுத்து அம்மாவுக்கு எதிராக திசை திருப்ப பார்க்கிறார். இதனால் நொந்துபோன ஈஸ்வரிக்கு ஆறுதலாக ரேணுகா, நந்தினி, ஜனனி இருக்கிறார்கள். அத்துடன் குழந்தைகளை பார்த்து பேசிட்டு வாருங்கள் என்று ஈஸ்வரியை அனுப்பி வைக்கிறார்.
மாடிக்கு வந்த ஈஸ்வரி, தர்ஷன் தர்ஷினியை பார்த்து பேசுகிறார். அப்பொழுது குணசேகரனின் மகனை பார்க்கும் பொழுது எங்கே பழைய படி அப்பா பேச்சை கேட்டு விடுவாரோ என்ற ஒரு பயம் வந்தது. ஆனால் தற்போது வந்த ப்ரோமோ படி, நல்ல மகனாக அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி அப்பாவை டார்டராக கிழித்து தொங்க விட்டார்.
இந்த மாதிரி மகனைப் பார்த்து ஈஸ்வரி ஆனந்த கண்ணீரில் பூரித்து போய் இருக்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரிக்கு இதோடு முடிவு கட்ட வேண்டும் என்று ஊரில் இருக்கும் பெரியவர்களை வீட்டிற்கு வர வைக்கிறார் குணசேகரன். அங்கே ஈஸ்வரிக்கு தேவையான பணத்தை கொடுத்து வீட்டை விட்டு அனுப்புவதற்கு முடிவெடுக்கிறார்.
இதற்கு ஈஸ்வரி, கல்யாணம் கட்டிட்டு வீட்டுக்குள்ள அடைச்சு போட்டுட்டு இப்போ அதுக்கு காசு கொடுத்து சரி கட்ட பாக்கறீங்களா என்று இவருடன் நியாயமான வாதத்தை முன் வைக்கிறார். அந்த நேரத்தில் அதிரடியாக போலீஸுடன் அப்பத்தா மாஸ் என்டரி கொடுக்கிறார்.
இனிமேல் தான் ஒவ்வொருவரும் குணசேகரனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டப் போகிறார்கள். அந்த போலீஸ் குணசேகரன் வீட்டில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும், அப்பத்தாவிற்கு எந்தவித அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஜீவானந்தம் எடுத்த ஆயுதம் தான் இது. இனி ஒவ்வொரு நாளும் குணசேகரன் சிக்கி சின்னாபின்னமாக ஆகப் போகிறார்.