சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

காலில் விழுந்து கெஞ்சும் குணசேகரனின் அம்மா.. எதிரி வீட்டில் கதி கலங்கிய பச்சோந்தி குணசேகரன்

தற்போது ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பரபரப்பாக எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. அப்பத்தாவை குணசேகரன் அவரது ரூமில் வைத்து ட்ரீட்மென்ட் செய்து வருகிறார். அத்துடன் இந்த ரூமுக்குள் வேறு யாரும் போகக்கூடாது என்று கண்டிஷன் போட்டு விட்டார். ஆனால் அப்பத்தாவை நான் பார்த்தே ஆக வேண்டும் என்று முடிவுடன் ஜனனி, போலீஸ் உடன் குணசேகரன் வீட்டிற்கு கூட்டிகிட்டு வருகிறார். ஆனாலும் எதற்கும் ஆசராமல் தெனாவட்டாக இருக்கிறார் குணசேகரன்.

பிறகு கதிர் எப்பொழுதும் போல வானத்துக்கும் பூமிக்கும் குதித்து போலீஸ் இடமே மல்லுக்கட்டி நின்றார். குணசேகரன் இந்த ஜனனிக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்புறம் எப்படி நான் என் அப்பத்தாவை பார்க்க விடுவேன் என்று கேட்கிறார். அதற்கு போலீஸ், சக்தியும் அப்பத்தாவின் வாரிசு தான் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதுபோல அவருக்கும் எல்லா ரைட்ஸும் இருக்கிறது என்று சொல்கிறார்.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

இதனைத் தொடர்ந்து போலீஸ் மிரட்டினதுக்கு பிறகு அடங்கி போன குணசேகரன் அப்பத்தா இருக்கும் ரூம் கதவை திறந்து எல்லாரையும் பார்க்க அனுமதித்தார். அப்பொழுது குணசேகரனிடம் இனிமேல் அப்பத்தாவை பார்ப்பதற்கு எல்லாரையும் அனுமதிக்க வேண்டும். அத்துடன் அப்பத்தாவை வீட்டில் வைத்துப் பார்க்கலாம் என்று எங்க சார்பாக ஒரு டாக்டரை கூட்டிட்டு வந்து கேட்போம். அவர் சொன்ன பிறகுதான் அப்பத்தாவை வீட்டில் வைக்கலாமா அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாமா என்று நாங்கள் முடிவு செய்வோம்.

அதற்கு நீங்கள் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும் இல்லை என்றால் நாங்கள் மேற்கொண்டு இதற்கான ஆக்சன் எடுக்க வேண்டியதா இருக்கும் என்று கூறிவிட்டார்கள். ஒரு வழியாக இந்த பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு குணசேகரின் அம்மா ஆதிரையின் வாழ்க்கையை நினைத்து ரொம்பவே புலம்பி கொண்டிருக்கிறார். பின்னர் ஞானத்திடம் என்னை எஸ்கேஆர் வீட்டுக்கு கூட்டிட்டு போ நான் அவங்களிடம் பேசணும் என்று சொல்கிறார். அடுத்து ஆதிரை நானும் வருகிறேன் என்று சொல்லி அனைவரும் எஸ் கே ஆர் வீட்டிற்கு போகிறார்கள்.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

அங்கே குணசேகரனின் அம்மா சாருபாலாவை பார்த்து என் பையன் பண்றது பெரிய தப்பு தான் அதற்காக என் மகள் வாழ்க்கையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று கெஞ்சுகிறார். ஆனால் சாருபாலா, குணசேகரனால் எங்க குடும்பமே அவமானப்பட்டதோடு மட்டுமல்லாமல் மனதார கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிறோம். அதனால் இந்த சம்பந்தம் பற்றி மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கிறது எங்களை பொறுத்தவரை ரொம்ப நல்லது என்று சொல்கிறார்.

பிறகு குணசேகரின் அம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மகள் வாழ்க்கையே மனதில் வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென்று சாருபாலா காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்து விட்டார். அந்த நேரத்தில் உள்ளே வந்த குணசேகரன் மற்றும் கதிர், அம்மாவின் செயலை பார்த்து கதி கலங்கி நிற்கிறார்கள். என்ன இருந்தாலும் பெத்த அம்மா தானே கொஞ்சமாவது மனசு துடிக்கதான செய்யணும். ஆனாலும் இதுக்கெல்லாம் காரணம் நிமிஷத்துக்கு நிமிஷம் பணத்துக்காக பச்சோந்தி மாதிரி மாறுகின்ற குணசேகரன் தான். அதனால்தான் இப்பொழுது தங்கையின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கிறது.

Also read: அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

- Advertisement -

Trending News