வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

எதிர்நீச்சல் போட வாடி வாசல் தாண்டி வா என்று சொல்வதற்கு போல அந்த வீட்டின் மருமகள்கள் ஒவ்வொருவரும் குணசேகரனை எதிர்த்து பேசி வருகிறார்கள். அனைய போற விளக்கு பிரகாசமாக இருக்குனு சொல்லுவாங்க. அதே மாதிரி தான் குணசேகரன் ஆட்டம் முடியும்போது இவ்வளவு பித்தலாட்டம் வேலைகளை செய்து ஜெயித்திட்ட மாதிரி இருக்கிறது. ஆனால் இனிமேல் தான் உண்மையான தோல்வினா என்ன என்று பார்க்கப் போகிறார்.

எஸ்கேஆர் மற்றும் சாரு பாலாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நிச்சயதார்த்தம் வரை போய் சொத்தை கொடுக்கிற மாதிரி கொடுத்து அவர் ஆசைப்பட்ட 40% சொத்தை வாங்கிக் கொண்டார். இதனால குணசேகரன் எதிர்பார்த்த மாதிரி அவங்கள பழியும் வாங்கியாச்சு சொத்தையும் வாங்கியாச்சு என்று மமதையில் இருக்கிறார். இதற்கு வந்து நியாயத்தை கேட்டு அரசு வை அவமானப்படுத்தி வெளியில் அனுப்புனது தான் மிச்சம்.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

ஆனாலும் இவரை இனிமேலும் இப்படியே சும்மா விடக்கூடாது, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ஆவேசத்தில் அரசு இருக்கிறார். அந்த நேரத்தில் ஜனனி மற்றும் ஈஸ்வரியே பார்த்த பொழுது அவர்களிடமும் இதுவரை நீங்க குணசேகரனால் ரொம்பவே கஷ்டப்பட்டு இருந்திருப்பீர்கள். இதற்கெல்லாம் நான் கூடிய சீக்கிரத்தில் முடிவு கட்டுகிறேன் என்று சொல்கிறார். ஆனாலும் இவர் சும்மா வாய் செவடலுக்கு தான் பொருத்தமாக இருப்பார். மற்றபடி இவர் எந்த காரியத்திற்கும் பிரயோஜனம் இல்லை.

இன்னொரு பக்கம் குணசேகரன் ஆதிரையை, தன் கூட பிறந்த தங்கையின் கூட என்று பார்க்காமல் அவளிடம் போட்டி போட்டுக் கொண்டு எனக்கு சமமாக யாரையும் வச்சு பார்க்க முடியாது உன்னை அந்த இடத்துக்கு கொண்டுட்டு வர முடியாது என்று ஆணாதிக்கத்துடன் பேசுகிறார். இதற்கு ரேணுகா உங்களுக்கு பெண்கள் என்றால் அவ்வளவு மட்டமாக போய்விட்டதா என்று கேட்க, அதற்கு குணசேகரன் ஞானம் உன் பொண்டாட்டிய சும்மா இருக்க சொல்லு அப்புறம் நான் தேவை இல்லாம ஏதாவது பேசுவேன் என்று சொல்கிறார்.

Also read: அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

அடுத்ததாக இவ்வளவு நடந்ததையும் பார்த்து சும்மா இருக்கிற விசாலாட்சி அன்றைக்கு மட்டும் மண்டபத்தில் பொண்ணு வாழ்க்கை பறிபோகுது என்று என்னெல்லாம் பண்ணி அலப்பறைய கூட்டி அப்பத்தாவை வாய்க்கு வந்தபடி பேசி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் இப்பொழுது குணசேகரனை எதிர்த்து ஏதாவது ஒன்று பேச முடியுதா அமைதியா இருந்து வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருக்காங்க.

மேலும் ஜனனி, விசாலாட்சி இடம் இப்ப புரியுதா உங்க பையன் செஞ்ச பித்தலாட்ட வேலைகள் எல்லாம் இதற்காக தான் அப்பத்தா கையெழுத்து போட மாட்டேன் என்று முடிவோடு இருந்தார். நீங்க யாருமே அவங்களை புரிஞ்சுக்கல என்று சொல்கிறார். அடுத்து அப்பத்தா சொன்ன அந்த ஜீவானந்தம் யார் என்றால் இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் தான் என்டரி கொடுக்க போகிறார் என்பது தெரிகிறது. இனிமேல் குணசேகரனின் சூழ்ச்சியை முறியடிக்க போகும் ஜனனியின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.

Also read: ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல்.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்

- Advertisement -

Trending News