Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனை தவிர மற்ற அனைவரும் போட்ட பிளானில் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார்கள். அதிலும் அண்ணனுக்கு எதிராக முதல்முறையாக கதிர் போட்ட பிளான் வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்த்தால் அதுவும் சொதப்பிவிட்டது.
சக்தியை நம்பி சித்தார்த்தை விட்டார். ஆனால் அங்கே கரிகாலன் வந்து தப்பிக்க வைத்து விடுகிறார். உடனே சித்தார்த் தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து ஓடி ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி இடம் போய்விட்டார். அதே மாதிரி ஈஸ்வரி, இனி தர்ஷினி பக்கத்தில் நெருங்கவே கூடாது என்று குணசேகரன் போலீஸ் மூலம் மறுபடியும் ஒரு செக் வைத்து விட்டார்.
ஆக மொத்தத்தில் குணசேகரன் மட்டுமே ஜெயித்துக் கொண்டு வருகிறார். இதற்கிடையில் நாங்கள் வானத்தில் பறந்து விடுவோம் சொந்த காலில் நின்னு பூமியை ரெண்டாக்கி விடுவோம் என்று சவால் விட்ட குணசேகரனின் மருமகள்கள் செல்லா காசாக தான் இப்பொழுது வரை நிற்கிறார்கள்.
தொடர்ந்து ஜெயித்து வரும் குணசேகரன்
அதே மாதிரி பணம் இருந்தால் தான் சந்தோசமாக இருக்க முடியும் என்று குணசேகரனின் மகன் தர்ஷனும் அப்பா பக்கம் போய்விட்டார். இதில் தர்ஷினியும் அப்பதான் முக்கியம் என்று குணசேகரன் கூட கூட்டு சேர்ந்து விட்டார். ஆனால் தர்ஷினி மூலம் தான் குணசேகரனுக்கு ஒரு சரியான பதிலடி கிடைக்கப் போகிறது.
அதாவது அப்பா கூடவே இருந்து வேட்டு வைக்கப் போகிறார். இவ்ளோ பிரச்சனைகள் நடந்த போதிலும் அந்த வீட்டில் உள்ள மருமகள் வழக்கம்போல் அடுப்பாங்கரையில் சமைப்பதும் புலம்புவதும் வேலையாக வைத்து வருகிறார்கள். இவர்கள் இதுக்கு மட்டும் தான் லாய்க்கு என்று எப்பொழுதுமே குணசேகரன் சொல்லிக் கொண்டே வருவார்.
அது சரிதான் என்று நிரூபிக்கும் வகையில் ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் சொதப்பி வரும் திருசெல்வமும் அப்படித்தான் நினைத்து விட்டாரோ என்னமோ. அந்த வகையில் ஒட்டுமொத்த நாடகத்திற்கு சைக்கோவாக மாறிவிட்டார்.
என்ன பண்ணுகிறோம் எந்த மாதிரி கதையை கொண்டு போகிறோம் என்று தெரியாத அளவிற்கு அரச்ச மாவையே அரைத்து வருகிறார். குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இருக்கும் வரை இந்த நாடகம் டாப்பில் இருந்தது. அவர் போன பிறகு தரமட்டமாக உடைந்து விட்டது.
ஒருவேளை அவர் இருக்கும் பொழுது அவர்தான் நாடகத்தில் கதை, வசனம், இயக்கம் எல்லாத்தையும் பண்ணி இருப்பாரு போல. இப்பொழுது தான் இதனுடைய சூட்சுமம் எல்லாம் வெளிவருகிறது.