வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குணசேகரன் இல்லாத தைரியத்தில் காதலனை தேடி சென்ற ஈஸ்வரி.. புள்ள பூச்சியை வைத்து கதையை உருட்டும் எதிர்நீச்சல்

Ethirneechal – Promo 14 October 2023: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை குணசேகரன் கதாபாத்திரத்தை வைத்து ரொம்பவே சுவாரஸ்யமாக கதை நகர்ந்து வந்தது. ஆனால் எப்போது குணசேகரன் கேரக்டர் இல்லையோ அப்போதே நாடகம் பார்ப்பதற்கு இண்ட்ரெஸ்ட் குறைந்துவிட்டது என்று பலரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் குணசேகரன் கேரக்டருக்கு ஏற்ற பொருத்தமான ஆளை தேடி பிடித்து நடிக்க கூட்டிட்டு வந்தார்கள்.

அப்படி வந்த வேல ராமமூர்த்தி புது குணசேகரன் ஆக வந்தாலும் அவரின் நடிப்பு எங்களுக்கு பிடிக்கவில்லை என்று இந்த நாடகத்திற்கு தற்போது எதிர்மறையாக விமர்சனம் வந்து கொண்டு இருக்கிறது. அதனாலயே இப்போதைக்கு இந்த குணசேகரன் கேரக்டரே வேண்டாம் என்று அவரை தற்காலிகமாக தூக்கி இருக்கிறார்கள். அதற்கு பதிலாக ஏற்கனவே நடித்து வரும் நடிகர்களை வைத்து சுவாரசியமாக கொண்டு போகலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ரொம்ப துள்ளிக் கொண்டு ஓவராக வரும் கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் கொட்டத்தை அடக்குவதற்காக சக்தியை வைத்து காய் நகர்த்துகிறார்கள். ஏற்கனவே பல மாதங்களாக இந்த சக்தி டம்மியாக வாயை மூடிக்கொண்டு வெறும் வேடிக்கை மட்டும் தான் பார்த்து வருகிறார். இவருக்கு ஏதாவது ஒரு பெர்பார்மன்ஸ் பண்ற மாதிரி டயலாக்கை கொடுங்க என்று ரசிகர்கள் ரொம்ப நாளாகவே கேட்டு வருகிறார்கள்.

அதை தற்போது பூர்த்தி செய்யும் வகையில் சக்தியை தூக்கலாக காட்டி கதை நகர போகிறது. அத்துடன் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி இறப்பிற்கு காரணம் கதிர் தான் என்ற உண்மை கௌதமிற்கு தெரிந்து விட்டது. அதனால் கதிரை அடக்குவதற்காக சரியான பதிலடி கொடுக்க கௌதம் படையெடுத்து வருகிறார்.

இதற்கிடையில் அவ்வப்போது ஜான்சி ராணியை வைத்து அந்த வீட்டு மருமகளிடம் வம்பு இழுக்கும் கதையை அடிக்கடி காட்டி வருகிறார்கள். ஆனாலும் இது மக்களிடம் அந்த அளவிற்கு எடுபடவில்லை. அதனால் அப்பத்தாவின் 40% சொத்தை வைத்து தீர்க்கமாக இதில் உங்களுக்கு இனி எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று பெண்களிடம் கரராக பேசி வருகிறார்.அடுத்தபடியாக கதிர் ரொம்பவே மட்டமாக ஈஸ்வரியை பற்றி தவறாக பேசுகிறார்.

அதாவது தற்போது அண்ணன் இல்லாததால் அடிக்கடி அந்த ஈஸ்வரி ஜீவானந்தத்தை தேடி சென்று பார்த்து பேசி வருகிறார். இது நல்லதுக்கு இல்லை என்று கதிர், ஞானத்திடம் சொல்கிறார். அந்த வகையில் ஜீவானந்தம் தானாக வந்து வலையில் சிக்கியிருக்கிறார். அவர் கதையை கூடிய சீக்கிரத்துல முடிச்சு விடனும் என்று ஆக்ரோசமாக பேசுகிறார். ஆனால் ஈஸ்வரி, ஜீவானந்தத்தை தேடி சென்றதற்கு காரணம் குணசேகரனை எப்படியாவது கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கேட்பதற்காகத் தான்.

- Advertisement -

Trending News