அடித்து அசிங்கப்படுத்திய குணசேகரன்.. வாடிவாசலாக மாறப்போகும் எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வண்ணம் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சீரியல் ஆனது தினமும் யூகிக்க முடியாத விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்களின் ஃபேவரிட் சீரியலாக மாறி உள்ளது. தற்பொழுது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அதே கெதி ஆனது சற்றும் யாரும் யோசிக்காத நிலையில் உடன் பிறந்தவருக்கே நேர்ந்துள்ளது. 

இந்நிலையில் இதுவரையிலும் குடும்பத்திற்குள் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகளுக்குள் நடந்த வாக்குவாதத்தின் மூலம் சரவெடி வெடிக்க தொடங்கியுள்ளது. குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களை வேலைக்காரி போல் அடிமைப்படுத்தி வைத்திருந்த நிலையில் அதனை தனது வார்த்தைகளால் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார்.

Also Read: டிஆர்பியில் அடித்து துவம்சம் பண்ணும் எதிர்நீச்சல்.. இந்த சீரியலுக்கு முதுகெலும்பாக இருக்கும் பிரபலங்கள்

ஆனால் தனது குடும்பத்தில் உள்ள ரத்த சொந்தங்களிடம் மட்டும் பக்குவமாய் பேசி இதுவரையிலும் காரியத்தை சாதித்து வந்தார்.  தற்பொழுது ஆணவத்தின் உச்சாணிக்கொம்பிற்கே சென்ற இவர் எதிரில் இருப்பவர் யார் என்று கூட பாராமல் தனது வார்த்தைகளால் சரமாரியாக விளாசி வருகிறார். முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல தனது அண்ணன் மூலம் ஞானசேகரனுக்கும் பெரும் சம்பவமானது நடந்துள்ளது.

இந்நிலையில் ரேணுகா உடைய அம்மாவின் மூலம் குணசேகரன் குடும்பத்தில் நிச்சயதார்த்தம் செய்ய போகும் ஜான்சி ராணியை பற்றிய உண்மையானது தெரிந்துள்ளது. ஆனால் இவர்களது குடும்பத்தை பற்றிய உண்மையை கூறிய ரேணுகாவின் தாயாரை சம்மந்தி என்று கூட பார்க்காமல் உங்களுக்கு இது தேவையில்லாத வேலை என்று சரமாரியாக தனது வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.

Also Read: குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய ஆதிரா.. குணசேகரனை எதிர்த்து சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

இதன் மூலம் ஞானசேகரன் தனது அண்ணனுக்கு எதிராக நீங்கள் செய்வது எதுவும் சரி இல்லை என்பது போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தனது தம்பி என்று கூட பார்க்காமல் இதுவரையிலும் தனக்கு சாதகமாக இருந்து வந்த நிலையில் உனக்கு என்ன உரிமை உள்ளது என்பது போல் தனது வார்த்தைகளால் காயப்படுத்தி உள்ளார். தனது குடும்ப எதிரியான எஸ் கே ஆர் இன் உடன்பிறந்த சகோதரர் ஆன அருணை தனது தங்கை ஆதிரா காதலித்ததால் உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகிறார்.

இதனால் குடும்ப மானத்தைக் காப்பாற்ற எப்படியாவது கரிகாலனுடன் ஆதிராவை திருமணம் செய்து வைப்பதற்கு பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து கரிகாலன் உடைய குடும்பம் பிராடு தனமான வேலைகளில் ஈடுபடுபவர்கள் என்று தெரிந்த நிலையிலும், அந்த குடும்பத்துடன் தான் நிச்சயதார்த்தம் செய்வேன் என்று விடாப்பிடியாக இருந்து வருகிறார்.

Also Read: டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தில் முன்னேறி பட்டையை கிளப்பும் எதிர்நீச்சல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்