வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அக்கப்போராக இருக்கும் ஆதிரை திருமணம்.. மட்டமான வேலையை பார்க்கும் குணசேகரன்

எல்லா சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி மக்களிடத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரே சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். ஆனால் தற்போது வரும் எபிசோடுகளை பார்த்து மக்கள் கொஞ்சம் நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். அதற்கு காரணம் ஆதிரையின் நிச்சயதார்த்தம் பல மாதங்களாக இழுத்து அடித்துக் கொண்டிருப்பதால் பார்க்கவே சலிப்பாக இருக்கிறது. அதிலும் நிச்சயதார்த்தம் என்கிற பெயரில் அவர்கள் செய்யும் வியாபாரத்தை பார்த்தாலே இந்த நாடகத்தை வெறுப்படையை செய்கிறது.

குணசேகரன் கேட்ட அந்த 40% சொத்தை அப்பத்தா உறுதியாக தர முடியாது என்று கூறிய நிலையில் அதை எப்படியாவது வாங்கி நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டும் என்று விசாலாட்சி அப்பாதாவிடம் கெஞ்சுகிறார். அதற்கு அப்பத்தா நீ ஒழுங்கான முறையில் பிள்ளைகளை வளர்த்தால் இப்படி சுயநலமாக யோசித்து இருக்க மாட்டார்கள். உனக்கும் இந்த மாதிரியான நெற்கதியான சூழ்நிலை வந்திருக்காது என்று இவ்வளவு நாளாக மனதில் பூட்டி வைத்த பாரத்தை இறக்கி விடுகிறார்.

Also read; நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

பின்பு விசாலாட்சி தன்னுடைய பிள்ளையின் நிலைமையை பார்த்து குணசேகரனிடம் கெஞ்சுகிறார். ஆனால் அவர் எதற்கும் அசராமல் சொத்து வந்தால் மேற்கொண்டு பேசலாம் என்று திட்டவட்டமாக கூறி போய்விட்டார். பிறகு அங்கிருந்த எஸ்கேஆர் குடும்பம் அருணை கூட்டிட்டு கிளம்புகிறார்கள். ஆதிரை ஒவ்வொருவர் காலிலும் விழுந்து கெஞ்சுகிறார். ஆனால் அதை கண்டுக்காமல் நாங்கள் கிளம்புகிறோம் என்று மண்டபத்தை விட்டு எஸ்கேஆர் குடும்பம் போய்விட்டது.

ஆனாலும் இந்த சீன் எல்லாம் பார்க்கும் பொழுது இது நாடகமாக இருந்தாலும் இந்த மாதிரியான விஷயங்கள் எங்கோ ஒரு மூலையில் நடக்கப் போய் தான் தொடர்களாக வருகிறது. இதை பார்க்கும் பொழுது மிகவும் கண்கலங்க வைக்கிறது. அதிலும் நேற்றைய எபிசோடில் அப்பத்தா விசாலாட்சி மற்றும் ஆதிரையின் நிலைமை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

Also read; ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

இதற்குப் பிறகு இன்றைய ஃப்ரோமோ படி ஜனனி சாருபாலாக்கு போன் பண்ணுகிறார். அதற்கு அவர் இனிமேல் பேசுறதுக்கு என்ன இருக்கிறது என்று கேட்டு கட் பண்ணுகிறார். அடுத்ததாக விசாலாட்சி அப்பத்தாவிடம் மனுசங்களை நம்பி மோசம் போனது போதும் என்று கோபத்தை வெளிக்காட்டுகிறார். அதற்கு அப்பத்தா பேசி முடிச்சிட்டியா விசாலாட்சி என்று கேட்கிறாய்.

இவர்களுடைய வியாபாரத்துக்கு நடுவில் ஆதிரையின் நிச்சயதார்த்தம் நின்று போய்விட்டது. இத்தனை நாளா ரொம்பவே ஜவ்வு மாதிரி இழுத்துட்டு வந்த இந்த நிச்சயதார்த்தம் ஒரு வழியாக முடிந்து விட்டு அடுத்து விறுவிறுப்பாக கொண்டு போவார் என்று எதிர்பார்த்து நிலையில் தற்போது முதலில் இருந்து ஆரம்பிப்பது போல் விட்டு இடத்துக்கு கதையை கொண்டு வந்து விட்டார்கள். பார்க்கலாம் ஆதிரையின் நிச்சயதார்த்தம் நடக்குமா அல்லது நேரடியாக திருமணம் ஆகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read; கோபியை குழப்பிவிடும் அம்மா.. பதறிப் போய் பாக்யாவிடம் வாய் கொடுத்து மூக்குடைந்த ராதிகா

- Advertisement -

Trending News