மேனாமினுக்கிய வைத்து நந்தினியை அசிங்கப்படுத்திய குணசேகரன்.. செல்லாக்காசாக நிற்கும் தம்பி, சந்தோஷத்தில் ஞானம்

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் இருக்கிற வரை அடிமைகளாக இருக்கும் நான்கு பெண்களுக்கும் விடிவுகலமே இல்லை. இவர்களுடன் சேர்ந்த கணவன்களுக்கும் நல்லதே நடக்கப் போவதில்லை என்பதற்கு ஏற்ப கதை நகர்ந்து வருகிறது. அதாவது ஞானம் எப்படியாவது பிசினஸ் பண்ணி முன்னேறிடலாம் என்று அடியெடுத்து வைத்தார்.

அப்படி வைத்த முதல் படியிலேயே அவருடைய காலை வாரிவிட்டார் குணசேகரன். இதெல்லாம் தெரிந்தும் கரிகாலனையும் குணசேகரனையும் எதுவும் செய்யாமல் அதே வீட்டில் சூடு சொரணை இல்லாமல் குப்பை கொட்டுகிறார் ஞானம் மற்றும் ரேணுகா. இதனை தொடர்ந்து நந்தினி, மொய் விருந்து வைத்து அதன் மூலம் ஆலமரமாக வளர்ந்து காட்டுவோம் என்று சவால் விட்டார்.

தலைவிரித்து ஆடும் சர்வாதிகாரம்

அதற்கேற்ற மாதிரி நந்தினி அப்பா அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணி வைத்தார். ஆனால் ஆரம்பமே சொதப்பல் என்று சொல்வதற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயமும் சொதப்பிக்கொண்டே வருகிறது. இதனால் கதிர் கடுப்பில் கொந்தளித்து இருக்கிறார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக கரிகாலன் மற்றும் சிம்மக்கல் ஜான்சி ராணி உள்ளே நுழைந்து விடுகிறார்.

தற்போது இந்த மேனாமினுக்கிய வைத்து குணசேகரன் மொத்த ஆட்டத்தையும் களைத்து நந்தினியை அசிங்கப்படுத்த போகிறார். அதாவது காதுகுத்து ஃபங்ஷன் விழாவில் என்ன நடக்கிறது என்று மோப்பம் பிடிப்பதற்காக ஜான்சி ராணி அதே கோவிலில் அன்னதானம் போட பிளான் பண்ணி விட்டார். தற்போது காதுகுத்துக்கு வந்த ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரன் எங்கே இருக்கிறாரோ, அங்கே போகலாம் என்று அனைவரும் ஜான்சி ராணி பக்கம் போய் விட்டார்கள்.

இதனால் ஒரு ஈ காக்கா கூட வராமல் நந்தினி கதிர் எதிர்பார்த்த மொய் விருந்து வெறிச்சோடி ஆகிவிட்டது. தற்போது பிச்சைக்காரனை விட கேவலமான நிலையில் இருக்கிறோம் என்று கதிர் அனைத்து கோபத்தையும் காட்டி ஆவேசமாக கொந்தளிக்கிறார். இதனால் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் நந்தினி வழக்கம்போல் கண்ணீர் விட்டு அழுகிறார்.

கடைசியில் பொண்டாட்டியை நம்பினால் செல்லாக்காசாக தான் நிற்க வேண்டும் என்று கதிருக்கு புரிந்து விட்டது. இதில் இன்னொரு விஷயம் என்னன்னா நான் தான் ரொம்பவே அசிங்கப்பட்டு அவமானப்பட்டேன் என்றால் என்ன விட ரொம்பவே மோசமாக கதிர் நிலமை ஆகிவிட்டதே என்று ஞானம் மனதிற்குள் ஒரு அல்ப சந்தோசம். ஆக மொத்தத்தில் இந்த குணசேகரன் இருக்கும் வரை அந்த நான்கு பெண்களுக்கும் விடிவு காலமே பிறக்கப் போவதில்லை.

இதற்கு பேசாமல் அடுப்பங்கரையிலிருந்து புறணி பேசி வேலைக்காரிகளாகவே இருந்திருக்கலாம். அதுதான் இந்த நாடகத்திற்கும் இயக்குனர் மற்றும் குணசேகரனுக்கு திருப்தியை கொடுத்திருக்கும். இதையெல்லாம் பார்த்து பிபி பிரஷர் எல்லாம் எகிறிது என்று புலம்புவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் இந்த நாடகத்தை ஆரம்பத்தில் குணசேகரன் கட்டிக் காத்துட்டு போயிருக்கிறார். அதை பாழாக்கும் விதமாக இப்ப உள்ள குணசேகரன் மற்றும் இயக்குனர் கதையைக் கொண்டு போகிறார்.

Stay Connected

1,170,275FansLike
132,044FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -