வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

எதிர்நீச்சலில் ஆதிராவின் ஜோலியை முடித்த குணசேகரன்.. ஞானத்தை அடுத்து கதிருக்கு வைத்த செக்

சின்னத்திரை சீரியல்கள் மக்களின் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில் டிஆர்பி லிஸ்டில் பயங்கர டப் கொடுக்கும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல், ஒவ்வொரு நாளும் பரபரப்பு குறையாமல் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. அதிலும் குணசேகரனுக்கு எதிராக குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆதிராவிற்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதிராவின் விருப்பத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார் குணசேகரன். காதலனான அருண் உடன் பேசிய நிலையில் குடும்பத்தில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது. தனக்கு உறுதுணையாக இருக்கின்ற கதிருடன் இணைந்து உடனடியாக கரிகாலனுடன், தங்கையின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று மும்மரமாக வேலை பார்த்து வருகின்றார்.

Also Read: லூசு மாதிரி இருந்த எஸ்ஜே சூர்யா.. வாலி உருவான கதையை புட்டு புட்டு வைக்கும் குணசேகரன்

இதனைத் தொடர்ந்து  தற்கொலை முடிவை எடுத்துள்ள ஆதிராவை பரபரப்பான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  ஆனால் இந்த சம்பவத்தினை சாதாரணமாக எடுத்துக்கொண்டு தனது அகங்காரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தன்னுடன் பிறந்தவர் என்று கூட பார்க்காமல் குடும்ப கவுரவம் தான் முக்கியம் என்று இருந்து வருகிறார்.

மேலும் ஆதிராவின் மேல் உள்ள பாசத்தால் கதிர் மருத்துவமனைக்கு செல்ல முற்படுகிறார். ஆனால் அதற்கும் அண்ணன் தடையாக இருந்து வருகிறார். ஞானசேகரனை அடியோடு வெறுத்த நிலையில் நீயும் போனால் உன்னையும் மறந்து விடுவேன் என்று கதிருக்கு செக் வைத்துள்ளார்.

Also Read: படத்துல வர காசு சும்மா, சீரியலில் அதிகமா சம்பாதிக்கும் 5 பிரபலங்கள்.. நம்பர் ஒன் இடத்தில் எதிர்நீச்சல் குணசேகரன்

இதனால் கதிர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கிறார். குணசேகரனுக்கு எதிராக குடும்பத்தில் உள்ள அனைவரும் மாறி உள்ள நிலையில், கூடிய விரைவில் கதிரும் திரும்பி விடுவார் என்று தோன்றுகிறது. ஆனால் ஆதிரா விடாப்பிடியாக இருந்து தனது காதலுக்காக உயிரையே பனையம் வைத்து உண்மையாக போராடி வருகிறார்.

அதிலும் ஒரு பெண்ணால் மனிதருக்கு எவ்வளவு குடைச்சல் என்று அகங்காரத்தில் பேசி வரும் குணசேகரனை, ரசிகர்கள் மனசாட்சியே இல்லாதவர் என்று கழுவி கழுவி ஊற்றுகின்றனர். தற்பொழுது உறுதுணையாக இருந்த கதிரும் அண்ணனுக்கு எதிராக மாற வேண்டும் என்று அதிலும் கூடிய விரைவிலேயே நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Also Read: இந்த கவர்ச்சி உடையில் குணசேகரன் பார்த்தா நீங்க காலி.. குடும்ப குத்து விளக்கு ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

- Advertisement -

Trending News