வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அப்பத்தாவிற்கு செக் வைத்த குணசேகரன்.. பகடைக்காயாக மாட்டி கொண்டு முழிக்கும் ஆதிரை

எதிர்நீச்சல் என்ற பெயருக்கு பொருத்தமாக இந்த சீரியலில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அதற்கு ஏற்ற மாதிரியே நடந்து வருகிறது. தற்போது ஆதிரையின் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற கோணத்தில் கதையை நகர்த்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் குணசேகரன் இந்த நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்றால் 40% சொத்து எனக்கு அப்பத்தா தர வேண்டும் அப்பொழுது தான் இந்த நிச்சயதார்த்தம் நடக்கும் என்று கண்டிஷன் போட்டார்.

இவர் கேட்டபடியே அப்பத்தாவும் திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாக நான் கையெழுத்து போட்டு தருகிறேன் என்று கூறியிருந்தார். அடுத்தபடியாக எஸ் கே ஆர் இன் தம்பி அரசு, இந்த நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்றால் எங்களுக்கு கதிர் பெயரில் இருக்கும் அந்த கம்பெனியை தர வேண்டும் என்று டிமாண்ட் செய்திருந்தார்.

Also read: சக்காளத்தி சண்டையை தொடங்கி வைத்த ராதிகா.. உருள போகும் கோபியின் தலை

இதற்கெல்லாம் ஒரு வழியாக முடிவெடுத்து இப்பொழுது நிச்சயதார்த்தம் வரை வந்தது. ஆனால் அதில் கதிர் குடித்துவிட்டு பெரிய குளறுபடி செய்து வந்தார். ஒரு வழியாக இந்த பிரச்சனையை சரி செய்து கதிர், அரசுக்கு அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டார். ஓகே இனிமேல் இந்த நிச்சயதார்த்தத்தில் பிரச்சினையில்லை நடத்தலாம் என்று அரசு கூறிவிட்டார்.

சரி இதற்குப் பிறகு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் குணசேகரன் அவருடைய தில்லு முல்லு வேலையை ஆரம்பித்துவிட்டார். அரசு கேட்டபடி அந்த கம்பெனியை நான் கொடுத்துவிட்டேன். அதே மாதிரி நான் கேட்டபடி அப்பத்தாவிடம் இருந்து 40% சொத்து எனக்கு இப்பொழுதே வேண்டும் என்று கேட்டு அப்பத்தாவிற்கு செக் வைத்து விட்டார்.

Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

இதை கேட்டு அங்கு இருந்த அனைவருமே ஷாக் ஆயிட்டார்கள். அதிலும் அப்பத்தா இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மௌனம் காத்திருந்தார். ஆனால் குணசேகரன் உறுதியாக அப்பத்தாவிடம் நீ கையெழுத்து போட்டால் மட்டும்தான் இந்த நிச்சயதார்த்தம் மேற்கொண்டு நடக்கும் என்று கூறிவிட்டார். என்னால் உன்னுடைய இஷ்டத்துக்கு
மாற முடியாது என்று வெளியே போய்விட்டார்.

சக்தி, ஜனனிடம் அவ்வளவுதான் இனிமேல் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று கூறிய நிலையில் ஜனனி அப்படியெல்லாம் விட முடியாது நிச்சயதார்த்தம் கண்டிப்பாக நடக்கும் என்று ஆவேசமாக கிளம்பி போகிறார். அவர் சொன்னபடி இந்த நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்றால் ஒரே வழி அப்பத்தா அந்த சொத்தை குணசேகரனிடம் கொடுத்தால் மட்டும்தான். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை ஏனென்றால் அப்பத்தா அந்த சொத்தை ஏற்கனவே வேற ஏதோ பிளான் பண்ணி வைத்து விட்டார். இவர்களுக்கு இடையில் பாவம் ஆதிரை தான் பகடைக்காயாக மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

Also read: வளைகாப்பில் ஒன்று கூடும் அண்ணன், தம்பிகள்.. ஆரம்பிக்கப் போகும் அடுத்த பஞ்சாயத்து

- Advertisement -

Trending News