வாலை சுருட்டி கிட்டு அடங்கி போகும் குணசேகரன்.. எல்லா விதத்திலும் பால் போட நினைக்கும் அப்பத்தா

எதிர்நீச்சல் சீரியலில் கொஞ்ச நாட்களாகவே ஆதிரையின் திருமணத்தை பற்றிய விஷயங்கள் தான் போய்க்கொண்டிருக்கிறது. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குணசேகரன் இப்பொழுது சொத்துக்காக சம்மதம் தெரிவித்து எஸ் கே ஆர் வீட்டுக்கு போய் சுமுகமாக நானே பேசி வருகிறேன் என்று சொல்கிறார். அதற்கு அப்பத்தா நீ மட்டும் போனால் நல்லா இருக்காது உன்னுடன் சேர்ந்து ஜனனியும் கூட்டிட்டு போ என்று கூறுகிறார்.

அதற்கு குணசேகரன், ஜனனி தானே எஸ் கே ஆர் குடும்பத்துடன் ஒட்டி உறவாடிக்கிட்டு இருக்கா அதனால சரியாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார். இதில் முக்கியமாக ஏமா ஜனனி சீக்கிரம் வா கார் கிட்ட வெயிட் பண்றேன் என்று சொன்னது தான் பெரிய ஹைலைட்டாக இருந்தது. ஒரு வழியாக இவர்கள் எஸ் கே ஆர் வீட்டிற்கு முறைப்படி பேசுவதற்கு கிளம்பி விட்டார்கள். அப்பொழுது ஜனனிடம், எஸ் கே ஆர் கிட்ட போன் பண்ணி கேளு வீட்டில் இருக்கிறார்களா என்று. நான் வாரேன்னு சொல்லாத என்று கூறுகிறார்.

Also read: விட்டா ட்ரோனை வேட்டி குள்ள விற்றுவாங்க.. எதிர்நீச்சல் குணசேகரன் ஃபேமஸ் ஆன கெத்தான 5 டயலாக்

ஜனனியும் போன் பண்ணி கேட்க அவர்கள் நாங்கள் வீட்டில் இல்லை திண்டுக்கல் ரோட்டில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் இல் இருக்கிறோம். உங்களுக்கு சிரமம் இல்லை என்றால் அங்கே வாங்க பேசலாம் என்று அரசு கூறுகிறார். அதற்கு அப்புறம் தான் தெரிகிறது அங்கே ட்விஸ்க்கு மேல டுவிஸ்ட் நடந்திருக்கிறது.

அதாவது குணசேகரனை பார்த்து அரசு நக்கலாக பேசியது பார்க்கவே நன்றாக இருந்தது. முக்கியமாக அவர்கிட்ட எஸ்கேஆர் கொடுத்த ஸ்பீச் எப்படி இருந்தது என்றால் வார்த்தையாலே சும்மா அவரை அடிச்சு காலி பண்ணிட்டாரு. நேரத்துக்கேற்ப மாறுகிறவன் ஒன்னு அயோக்கியனா இருக்கணும் அல்லது முட்டாளாக இருக்கணும் அந்த இரண்டுமே நான் கிடையாது.

Also read: குணசேகரன் மூக்கை உடைத்த ஜான்சிராணி.. ரணகளமான எதிர்நீச்சல் சீரியல்

என்னால பழசு எல்லாம் மறந்துட்டு உன்கிட்ட வந்து சரிக்கு சமமாக பேசவும் முடியாது என்று மூஞ்சில பல்லாருன்னு அடிக்கிற மாதிரி பேசினார். ஆனாலும் இதை கேட்டு கொஞ்சம் கூட சூடு, சுரணை இல்லாம வாலை சுருட்டி கிட்டு அடங்கிப் போகிறார் குணசேகரன். இதைத்தான் பணம் பத்தும் செய்யும் சொல்வாங்க. பணத்துக்காக எதை வேணாலும் செய்யலாம், யார் காலில் கூட விழுவதற்கு தயாராக இருக்கிறார்.

அடுத்தபடியாக எஸ்கேஆர் இது என்னுடைய தம்பி வாழ்க்கை இதில் நான் கருத்து சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை. இந்தத் தாம்பூல தட்டை என்னைத் தவிர வேறு யாரு வாங்கினாலும் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். உடனே அரசு இந்த தட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் தான் யாராவது வாங்க வேண்டும்.

ஆனால் இப்பொழுது எங்கள் வீட்டில் யாரும் இல்லாததால் எங்கள் சார்பாக ஜனனி வாங்கிக் கொண்டால் சரியாக இருக்கும் என்று கூறிவிட்டார். மேலும் நல்லபடியாக இந்த விஷயம் ஆதிரைக்கு ஆதரவாக முடிந்திருக்கிறது. குணசேகரனை எல்லா விதத்திலும் லாக் போடுவதற்கு சரியான ஆளு நம்ம அப்பத்தா தான். அதை சரியாக அவர் பயன்படுத்தி வருகிறார்.

Also read: எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்