Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், அஞ்சனா தன்னுடைய காதலை காப்பாற்றும் விதமாக
சித்தார்த் வீட்டிற்கு ஜனனி மற்றும் சக்தியை கூட்டிட்டு போகிறார். போன இடத்தில் உமையா மிரட்டலுக்கு பயந்து சித்தார்த் எதுவுமே வாய் திறக்காமல் அமைதியாக இருந்து விடுகிறார்.
இதனால் கோபப்பட்ட அஞ்சனா, சித்தார்த் சட்டையை பிடித்து வீட்டிலே எல்லார்கிட்டயும் நம்முடைய காதலை சொல்லி சம்மதம் வாங்குகிறேன் என்று சொன்னல இப்ப வாய மூடிட்டு இருக்க என்று கேட்கிறார். உடனே உமையா, காதல் கல்யாணம் எல்லாம் இந்த வீட்டிற்கு சரிப்பட்டு வராது.
நாங்கள் பார்த்து வைக்கிற பெண்ணை தான் சித்தார்த் கல்யாணம் பண்ணுவான் என்று சொல்லி விடுகிறார். உடனே அங்கே இருந்த ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி சக்தியை அடித்து வெளியே தள்ளி விடுகிறார்கள். பிறகு அஞ்சனா, ஜனனி மற்றும் சக்தி அனைவரும் கிளம்பி விடுகிறார்கள்.
இதனை தொடர்ந்து ஜனனி மற்றும் சக்தி, குணசேகரன் வீட்டிற்கு வந்ததும், தர்ஷினி இப்ப இருக்க நிலைமையில் எப்படி அவளை குணமாக்க வேண்டும் என்று தான் நாம் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு கரிகாலன் இல்லையினதும் தற்போது வேறு ஒரு சம்மதத்தை பேசி ஏன் மேலும் மேலும் தர்ஷினியை காயப்படுத்துகிறார்கள் என்று ஜனனி கேட்கிறார்.
அதற்கு குணசேகரன் என்னுடைய மகள் விஷயத்தில் என்னைத் தவிர வேறு யாரும் பேசுவதற்கு தகுதியில்லை என்று சொல்கிறார். முக்கியமாக நீங்கள் இதில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்று குணசேகரன் சொல்கிறார். அதற்கு சக்தி எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
ஏனென்றால் நீங்கள் பார்த்து வைத்திருக்க அந்த மாப்பிள்ளை ஜனனியின் தங்கச்சியை காதலிக்கிறான். அவர்கள் இருவரும் தான் கல்யாணம் பண்ணப் போகிறார்கள். இதனால் நீங்கள் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். உடனே குணசேகரன் அவருடைய வக்கிரபுத்தியை வைத்து ஜனனியையும் குடும்பத்தையும் அசிங்கமாக பேசி விடுகிறார்.
கதையில் ஏற்படப் போகும் ட்விஸ்ட்
அது மட்டும் இல்லாமல் இனிமேல் தான் இந்த சம்மதத்தில் நான் ரொம்ப தீர்மானமாக இருப்பேன். என்னுடைய மகள் தர்ஷினிக்கும் உமையாவின் மகன் சித்தார்த்துக்கும் தான் கல்யாணம் நடக்கும். நான் நடத்தி வைப்பேன் என்று சவால் விடுகிறார். ஆக மொத்தத்தில் குணசேகரன், மகளை வைத்து வியாபாரம் பண்ணி அதில் குளிர்காய வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் இதற்கு இடையில் தான் இந்த நாடகத்தில் ஒரு ட்விஸ்ட் ஏற்படப்போகிறது. அதாவது ஜனனியின் அப்பத்தா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறார். அந்த வகையில் சித்தார்த் நாச்சியப்பன் மகளை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் முகத்தில் ஒரு சந்தோஷம் தெரிந்தது.
அதனால் ஜனனியின் அப்பத்தாவும், நாச்சியப்பனும் சேர்ந்து இவர்களுக்கு கல்யாணத்தை நடத்தி வைத்து குணசேகரனுக்கும் உமையாவுக்கும் ஒரு தரமான சம்பவத்தை செய்யப் போகிறார்கள். இதற்கு இடையில் ஈஸ்வரி, ஜீவானந்தத்தை தேடி கண்டுபிடித்து கூட்டிட்டு வரவேண்டும் என்று முயற்சி பண்ணப் போகிறார்.