Ethirneechal-Gunasekaran: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் முதலிடத்தை வகித்து வந்தது. திடீரென தொடரில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். இதனால் இப்போது படங்களில் நடித்து வந்த வேலராமமூர்த்தி தான் குணசேகரனாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
மாரிமுத்தை பொருத்தவரையில் வில்லன் என்றாலும் ஒரு நகைச்சுவை தோரணைவுடன் அவரது நடிப்பு இருக்கும். இதனால் தான் வில்லன் நடிகராக இருந்த போதும் அவருக்கான ரசிகர்கள் ஏராளமாக இருந்தனர். குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வேல ராமமூர்த்தி சரியாக இருப்பார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.
அதேபோல் பல படங்களில் வேலராமமூர்த்தி கமிட்டாகி இருந்தாலும் எதிர்நீச்சல் தொடரை விட அவருக்கு மனதில்லை. இதனால் சமீபத்தில் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் ஆக மாஸ் என்ட்ரி கொடுத்து இருந்தார். மேலும் எப்போதுமே முன்னாள் நடித்த ஒருவரின் கதாபாத்திரத்தை புதிய ஒருவர் ஈடு செய்ய முடியாது.
அதற்காக பல விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அதேபோல் தான் மாரிமுத்துவிடம் இருந்த நகைச்சுவை வேல ராமமூர்த்தி இடம் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. மேலும் இவரால் கதையே வேறு திசையை நோக்கி நகர்கிறது என கூறப்பட்டது. இதனால் தனக்கு குணசேகரன் கதாபாத்திரம் துளி கூட செட் ஆகவில்லை என்று பாரிஸ் பறந்து விட்டார் கிடாரி.
அதாவது ஏற்கனவே ஒரு படத்திற்காக பாரிஸில் படப்பிடிப்பு முடித்துவிட்டு தான் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க மேலராமமூர்த்தி வந்திருந்தார். இப்போது மீண்டும் அந்த படத்திற்காக பாரிஸுக்கு சென்று இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் மாடனாக இருக்கும் வேல ராமமூர்த்தியின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு உடனடியாக எதிர்நீச்சல் தொடரில் நடிக்க வேலராமமூர்த்தி வந்துவிடுவார் என்ற ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதை அறிந்த ரசிகர்கள் இப்போது அவர் இல்லாத காரணத்தினால் எதிர்நீச்சல் தொடர் சூடு பிடித்திருக்கிறது. தயவுசெய்து வேலராமமூர்த்தி என்ட்ரி கொடுக்க வேண்டாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மாடனாக இருக்கும் வேல ராமமூர்த்தியின் புகைப்படம்