சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தேங்காய் மண்டையனை போட்டுத் தள்ள துடிக்கும் சவுண்ட் சரோஜா.. அப்பத்தா, எஸ்கேஆர் க்கும் வலை விரித்த குணசேகரன்

குடும்பமே சேர்ந்து பார்க்கக் கூடிய ஒரே சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் பல பல அதிரடி திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சக்கை போடு போட்டு வருகிறது. அதாவது அப்பத்தா ஆதிரையின் கல்யாணத்தை நிறுத்திவிடு என்று சொன்னபோது குணசேகரன் சரி நிறுத்தி விடுறேன். ஆனா அதுக்கு நீ 40% ஷேர் எனக்கு கொடுத்து விட வேண்டும் என்று டீல் போட்டார்.

ஆனால் இதை கேட்ட அப்பத்தா எதுவுமே பதில் சொல்லாமல் மௌனம் காத்தது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் குணசேகரன் இந்த சொத்துக்காக தான் இவ்வளவு வீரப்பா இருந்தாரா என்று நினைக்கும் பொழுது அடுத்த நொடியிலே ஒரு மாஸ்டர் பிளான் போட்டு காய் நகர்த்தி வருகிறார். ஒரு பழமொழி கூட உண்டு ஒரு கல்லிலே இரண்டு மாங்காய். அதை இவர் தான் சரியாக பயன்படுத்துகிறார் என்றே சொல்லலாம்.

Also read: எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

அதாவது என்னவென்றால் ஒரு பக்கம் அப்பத்தாவிடம் இருந்து 40% பங்கு ஆட்டைய போடணும், மறுபக்கம் ஆதிரைக்கு திருமணம் செய்து வைத்து அதன் மூலமாக எஸ்கேஆர் சொத்தை கரக்கணும் என்று தம்பிகளுடன் சேர்ந்து திட்டத்தை தீட்டி வருகிறார். அதே நேரத்தில் கரிகாலனை வீட்டுக்கு கொண்டு வந்தா சொத்துக்கள் வராது ஏகப்பட்ட பிரச்சனைகள் தான் வரும் என்று இவருடைய மூளைக்கு எட்டி இருக்கிறது.

அதனாலேயே தந்திரமாக அப்பத்தாவிடம் ஓகே சொல்லி இருக்கிறார். இவருடைய அதி புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆக வேண்டும். எந்த நேரத்தில் எதை யோசிப்பார் என்று தெரிஞ்சுக்க முடியல. அவ்வளவு வில்லத்தனத்துக்கு மறு உருவமாகவே வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் இந்த சக்தி பையனுக்கு இப்பதான் பொண்டாட்டிங்கிற நினைப்பு வந்திருக்கு.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆளு ஜான்சி ராணி தான்.. அப்பத்தாவின் சொத்தை ஆட்டை போட்ட செம ஸ்கெட்ச்

ஒரு விதத்தில் அதை பார்ப்பதற்கு நல்லா தான் இருக்குது. முதல்முறையாக ஜனனிக்கு சப்போர்ட் பண்ணி இவர் குரலை உயர்த்துவது ரொம்ப புடிச்சிருக்கு. அதாவது சக்திக்கு இப்பதான் சக்தியை வந்து இருக்குன்னு சொல்லலாம். இதே போலவே எப்பொழுதும் சக்தி மற்றும் ஜனனி இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பது.

இதற்கு அடுத்து குணசேகரனால் அவமானப்பட்ட கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி அதிரடியாக குணசேகரனின் சோலியை முடிப்பதற்கு திட்டம் போடுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் காசு வெட்டி போடுவேன்னு சொன்னது சிரிப்பு தான் வந்தது. ஆனாலும் கோபத்தின் உச்சத்தில் இருக்கும் சவுண்ட் சரோஜா அதாங்க நம்ம ஜான்சி ராணி, குணசேகரனை நல்லா வச்சு செய்யப் போறார் மட்டும் தெரியுது. என்னதான் நடக்கும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

Also read: நிஜத்திலும் நான் குணசேகரன் மாதிரி ஆளை சந்தித்து இருக்கிறேன்.. எதிர்நீச்சல் மருமகளின் உருக்கமான பேச்சு

- Advertisement -

Trending News